சீனாவிற்கு பதிலடி: இந்தோ-பசிபிக் பகுதியில் அமெரிக்கா – ஆஸ்திரேலியா ராணுவக் கூட்டாண்மை விரிவாக்கம்
சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில், அமெரிக்காவுடனான பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த உள்ளதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவில் அமெரிக்க ராணுவத்தின் இருப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாஷிங்டனில் அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ், “ஆஸ்திரேலியாவில் அமெரிக்கப் படைகளின் இருப்பு அனைத்துத் துறைகளிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது” என்று தெரிவித்தார். […]













