நேபாளத்தின் த்ரிசூலி ஆற்றின் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட பனி பாறை மற்றும் மண்சரிவில் சிக்கி 1,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

நேபாளம் பேரழிவு: 9 நாட்களுக்கு பிறகு இருவர் உயிருடன் மீட்பு

  • September 4, 2026
  • 0 Comments

நேபாளத்தின் த்ரிசூலி ஆற்றின் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட பனி பாறை மற்றும் மண்சரிவில் சிக்கி 1,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில், பேரழிவு ஏற்பட்டு ஒன்பது நாட்களுக்குப் பிறகு, த்ரிசூலி ஆற்றின் நீர்மின் நிலையத்தோடு தொடர்புடைய சுரங்கப்பாதையிலிருந்து இருவர் வெள்ளிக்கிழமை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேல் த்ரிசூலி 3A நீர்மின் திட்டத்தின் (Upper Trishuli 3A Hydropower Station) சுரங்கப்பாதையிலிருந்து மீட்கப்பட்ட இருவரும் சஞ்சய் சா (இயந்திரவியல் மேலாளர்) மற்றும் கபீர் மகர்ஜன் (இயந்திரவியல் மேற்பார்வையாளர்) […]

நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாகச் சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. செய்தி

11 வயது சிறுவனின் உயிரை பறித்த நாவல் பழம்: மட்டக்களப்பில் சோகம்

  • September 4, 2026
  • 0 Comments

நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாகச் சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பாலையடிவட்டை வைத்தியசாலை வீதியைச் சேர்ந்தவரும், 37 ஆம் கிராமம் நவகிரி வித்தியாலயத்தில் தரம் 6 இல் கல்வி கற்று வந்தவருமான ரொ. சஞ்சீவ் என்ற 11 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சிறுவனின் வீட்டுக்கு முன்னால் நின்ற நாவற்பழ […]

அதிகாரப்பகிர்வு, நம்பகமான பொறுப்புக்கூறல் கட்டமைப்பு, சுதந்திரமான சிறப்பு சட்டவாளருடன் கூடிய சிறப்பு நீதிப் பொறிமுறை, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் இணைய வேண்டும் என இலங்கையிடம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் வலியுறுத்தியுள்ளது. இலங்கை செய்தி

இலங்கையில் சிறப்பு நீதிப்பொறிமுறையை வலியுறுத்தும் ஐ.நா அறிக்கை

  • September 4, 2026
  • 0 Comments

அதிகாரப்பகிர்வு, நம்பகமான பொறுப்புக்கூறல் கட்டமைப்பு, சுதந்திரமான சிறப்பு சட்டவாளருடன் கூடிய சிறப்பு நீதிப் பொறிமுறை, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் இணைய வேண்டும் என இலங்கையிடம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் வலியுறுத்தியுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 63வது கூட்டத்தொடரில் சமர்ப்பிப்பதற்காக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 2025 ஒக்ரோபரில் நிறைவேற்றப்பட்ட 60/1 தீர்மானத்தின் அடிப்படையில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் […]

இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன், காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான புரிந்துணர்வு உடன்பாட்டை இறுதி செய்வதை விரைவுபடுத்த இலங்கையும் இந்தியாவும் நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இலங்கை செய்தி

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கான புரிந்துணர்வு உடன்பாடு குறித்து ஆராய்வு

  • September 3, 2026
  • 0 Comments

இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன், காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான புரிந்துணர்வு உடன்பாட்டை இறுதி செய்வதை விரைவுபடுத்த இலங்கையும் இந்தியாவும் நடவடிக்கைகளை எடுத்துள்ளன. எரிசக்தி, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர், அனுர கருணாதிலக தலைமையில், அவரது பணியகத்தில் இன்று காலை புரிந்துணர்வு உடன்பாடு குறித்த ஒரு சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது. இலங்கைக்கான இந்திய பிரதி தூதுவர் மைத்ரே குல்கர்னி உள்ளிட்ட இந்திய அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு குழு இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றது. பிரதி அமைச்சர் ஜனித […]

இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவரை இன்று சந்தித்து பேச்சு நடத்திய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அரசியல், காணி மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பாக எடுத்துரைத்தார். செய்தி

நெதர்லாந்து தூதுவருடன் சாணக்கியன் சந்திப்பு: தமிழர் பிரச்சினை குறித்து எடுத்துரைப்பு

  • September 3, 2026
  • 0 Comments

இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவரை இன்று சந்தித்து பேச்சு நடத்திய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அரசியல், காணி மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பாக எடுத்துரைத்தார். வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களின் குடிப்பரம்பலை மாற்றும் நோக்கிலான நடவடிக்கைகள் கடந்த காலங்களில் மாத்திரமன்றி, தற்போதைய அரசின் கீழும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று சாணக்கியன், தூதுவரிடம் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, மயிலத்தமடு – மாதவனை போன்ற பாரம்பரிய […]

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக சஜீவனி தில்கா லக்மாலி கருணாநாயக்க இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இலங்கை செய்தி

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக சஜீவனி தில்கா லக்மாலி பதவிப் பிரமாணம்

  • September 3, 2026
  • 0 Comments

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக சஜீவனி தில்கா லக்மாலி கருணாநாயக்க இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இவர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாகவும் பணியாற்றியுள்ளார். தற்போது வெற்றிடமாக உள்ள மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பதவிக்காக குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

ஈரான் போரில் அமெரிக்கர்கள் எவரும் உயிரிழக்கவில்லை என்று கூறிய கூற்றுக்கு அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லூட்னிக் (Howard Lutnick) மன்னிப்புக் கோரியுள்ளார். உலகம் செய்தி

“போர் இழப்பு குறித்து சர்ச்சை கருத்து” – மன்னிப்பு கோரினார் அமெரிக்க வர்த்தகச் செயலாளர்

  • September 3, 2026
  • 0 Comments

ஈரான் போரில் அமெரிக்கர்கள் எவரும் உயிரிழக்கவில்லை என்று கூறிய கூற்றுக்கு அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லூட்னிக் (Howard Lutnick) மன்னிப்புக் கோரியுள்ளார். போரில் 18 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதை ஒப்புக்கொண்ட அவர், வெனிசுவேலா மீதான ராணுவ நடவடிக்கையை நினைவில் கொண்டு அவ்வாறு தவறாகக் கூறிவிட்டதாக விளக்கமளித்துள்ளார். இது குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள லூட்னிக்: “நான் தவறாகக் கூறிவிட்டேன். நமது ராணுவத்தைச் சேர்ந்த 18 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த […]

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிராக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அரசியல் இலங்கை செய்தி

“22 வேண்டாம்” – கொழும்பில் போராட்டம் முன்னெடுப்பு

  • September 3, 2026
  • 0 Comments

அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிராக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்தப் போராட்டத்தில் பொதுமக்கள், அரசியல் ஆர்வலர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பங்கேற்று தமது பலமான எதிர்ப்பைக் காட்டினர். போராட்டத்தின் நடுவே மக்கள் வெள்ளத்தின் மத்தியில் கலந்துகொண்டு போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய சஜித் பிரேமதாச, மக்களின் அடிப்படை உரிமைகளைப் […]

துபாயில் நேற்று நடைபெற்ற ஆசியக் கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டியில், நடப்பு சாம்பியனான இலங்கை அணி 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தோனேசியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. செய்தி விளையாட்டு

வரலாற்று சாதனை: இலங்கை மகளிர் அணி அபார வெற்றி

  • September 3, 2026
  • 0 Comments

துபாயில் நேற்று நடைபெற்ற ஆசியக் கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டியில், நடப்பு சாம்பியனான இலங்கை அணி 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தோனேசியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இலங்கை அணியின் தலைவி சமரி அத்தப்பத்து பந்துவீச்சில் ஹேட்ரிக் உட்பட 5 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றித் தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார். நிலக்ஷிகா சில்வா 35 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அணிக்கு வலுசேர்த்தார். ஆரம்பத்தில் தடுமாறிய இலங்கை நாணய சுழற்சியில் வென்ற […]

புளியங்கொட்டை தொண்டையில் சிக்கியதில் 7 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ள பரிதாபகரமான சம்பவமொன்று கண்டி, கலஹா – நிலம்பை, குருகலே பகுதியில் இடம்பெற்றுள்ளது. இலங்கை செய்தி

புளியங்கொட்டை தொண்டையில் சிக்கி 7 வயது சிறுமி பலி

  • September 3, 2026
  • 0 Comments

புளியங்கொட்டை தொண்டையில் சிக்கியதில் 7 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ள பரிதாபகரமான சம்பவமொன்று கண்டி, கலஹா – நிலம்பை, குருகலே பகுதியில் இடம்பெற்றுள்ளது. குடும்பத்தின் இளைய மகளான இச்சிறுமி, முன்தினம் மாலை தனது சகோதரிகளுடன் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெற்றோருக்குத் தெரியாமல் சமையலறையிலிருந்த புளியம்பழத்தை எடுத்து விளையாடியவாறு சாப்பிட்டபோது, புளியங்கொட்டை ஒன்று தொண்டையில் சிக்கிச் சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட குடும்பத்தினர், சிறுமியை உடனடியாக லொறி ஒன்றில் பேராதனை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல முயன்றனர். இருப்பினும், […]