இலங்கை செய்தி

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் வெசாக் கூடுகள் உடைப்பு: பொலிஸார் தீவிர விசாரணை!

  • June 1, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த வெசாக் கூடுகள், நேற்று இரவு இனந்தெரியாத நபர்களினால் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன. வெசாக் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்களினால் பல்கலைக்கழக வளாகத்தினுள் வெசாக் கூடுகள் அமைக்கப்பட்டு, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு அலங்கரிக்கப்பட்டிருந்த வெசாக் கூடுகளே நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இனந்தெரியாதோாரால் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்களினால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் வழங்கிய முறைப்பாட்டையடுத்து, சம்பவ இடத்துக்குச் […]

ஐரோப்பா செய்தி

‘அணுசக்தி ஒப்பந்த பேச்சு’ – தொழில்நுட்ப ஆலோசனை வழங்க பிரான்ஸ் தயார்!

  • June 1, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்தத்தை எட்ட ஜனாதிபதி ட்ரம்ப் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டவுடன், ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்கான சர்வதேசப் பணியில் பிரான்ஸ் தீவிரமாகப் பங்கேற்கும் என்று அவர் உறுதியளித்தார். குறிப்பாக, ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளில் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கவும் பிரான்ஸ் தயாராக உள்ளது அவர் கூறியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் […]

இலங்கை செய்தி

வழக்கு பதிவு ஏட்டை திருடியவருக்கு மறியல்: உடந்தையாக இருந்த பெண்ணுக்கு பயணத் தடை!

  • June 1, 2026
  • 0 Comments

திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு பதிவு ஏட்டினை திருடிய சந்தேக நபரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு , திருகோணமலை நீதிமன்ற நீதவான் எம். எஸ். எம். சம்சுதீன் முன்னிலையில் இன்று (01) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபருக்கே இவ்வாறு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிலம் தொடர்பிலான வழக்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் இடம்பெற்று […]

ஆஸ்திரேலியா செய்தி

உலகை மிரட்டும் Ebola வைரஸ்: ஆஸ்திரேலியாவில் பயணக் கட்டுப்பாடு?  

  • June 1, 2026
  • 0 Comments

இத்தாலி மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் எபோலா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையிலும், எபோலா பாதிப்புள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு ஆஸ்திரேலியா பயணக் கட்டுப்பாடுகளையோ அல்லது தனிமைப்படுத்தல் (Quarantine) விதிகளையோ விதிக்காது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ” சர்வதேச அளவில் எபோலா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வந்தாலும், இந்த கட்டத்தில் ஆஸ்திரேலியா பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கத் திட்டமிடவில்லை.” – என்று ஆஸ்திரேலிய சுகாதார அமைச்சர் Mark Butler தெரிவித்தார். […]

உலகம் செய்தி

அமைதி ஒப்பந்தத்தை நாடும் ஈரான்: ட்ரம்ப் தகவல்!

  • June 1, 2026
  • 0 Comments

அமைதி ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கு ஈரான் உண்மையாகவே விரும்புகின்றது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது ட்ரூத் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். “ஈரான் ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ள உண்மையில் விரும்புகிறது. அது அமெரிக்காவுக்கும் அமெரிக்காவுடன் துணை நிற்கும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள ஓர் ஒப்பந்தமாக இருக்கும். ஆனால் இந்த விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேட விரும்புபவர்கள், நான் இன்னும் வேகமாகச் செயல்பட வேண்டும், இன்னும் மெதுவாகச் செயல்பட வேண்டும், […]

உலகம் செய்தி

மேற்காசியாவில் மீண்டும் போர் பதற்றம்!

  • June 1, 2026
  • 0 Comments

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே வான்வழித் தாக்குதல்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. இதனால் மேற்காசியாவில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச கடல் பகுதியில் பறந்து கொண்டிருந்த தங்களின் அதிநவீன MQ-1 Predator ரக ட்ரோனை ஈரான் சுட்டு வீழ்த்தியதற்குப் பதிலடியாக, ஈரானில் உள்ள ராணுவ ரேடார் மற்றும் ட்ரோன் கட்டுப்பாட்டு மையங்கள் மீது அமெரிக்கப் படைகள் அதிரடி குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளன என்று அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல அண்டை நாடான குவைத் மீது ஒரே நேரத்தில் பல […]

இந்தியா செய்தி

இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக ராஜா சுப்பிரமணி பதவியேற்பு!

  • June 1, 2026
  • 0 Comments

இந்தியாவின் 3ஆவது முப்படை தலைமை தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் ராஜா சுப்பிரமணி நேற்று பதவியேற்றுள்ளார். முப்படை தலைமை தளபதியாக பதவி வகித்த ஜெனரல் அனில் சவுகானின் பதவிக்காலம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இந்நிலையிலேயே புதியவர் பதவியேற்றுள்ளார். ஜெனரல் ராஜா சுப்பிரமணி , தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் இந்திய ராணுவ அகாடமியில் பயிற்சியை முடித்து கடந்த 1985-ம் ஆண்டு இந்திய ராணுவத்தின் கர்வால் ரைபிள்ஸ் படைப்பிரிவில் அதிகாரியாக சேர்ந்தார். ராணுவத் துணை தளபதியாக பணியாற்றிய இவர் […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

இலங்கை தமிழ்ப் பெண் கார் ஏற்றிக் கொலை: சென்னையில் பயங்கரம்!

  • June 1, 2026
  • 0 Comments

சென்னை, கோயம்பேட்டில் மதுபான பாரில் நடனம் ஆடும்போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில், இலங்கை தமிழ் பெண்ணொருவர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ள கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சென்னை கோயம்பேட்டில் பிரபல நட்சத்திர ஹோட்டலொன்று உள்ளது. அதன் உள்புறம் உள்ள மது பாரில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் இரு தரப்பினர் மது அருந்தினர். அப்போது, அவர்களுக்குள் நடனமாடுவதில் தகராறு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். […]

இந்தியா செய்தி

இந்தியாவிடமிருந்து ஏவுகணை வாங்கும் இந்தோனேசியா!

  • June 1, 2026
  • 0 Comments

இந்தியாவின் அதிநவீன பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகளை இந்தோனேசியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய மத்திய பாதுகாப்புத் துறைச் செயலர் ராஜேஷ் குமார் சிங் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்ற ‘ஷாங்ரி-லா பாதுகாப்பு உச்சி மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார். ‘‘வியட்நாம் நாட்டுடனான பிரம்மோஸ் ஏவுகணை விற்பனை ஒப்பந்தம் ஏற்கனவே கையெழுத்தாகிவிட்டது. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை. இதேபோல், இந்தோனேசியா நாட்டுடனான பேச்சுவார்த்தையும் சுமுகமாக முடிவடையும் […]

ஆஸ்திரேலியா செய்தி

40 கிலோ கொக்கைன் கடத்தல்: ஆஸ்திரேலியாவில் சந்தேகத்திற்கிடமான லாரி எரிப்பு!

  • June 1, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா, வடக்கு குயின்ஸ்லாந்தின் ஒதுக்குப்புறமான படகுத் துறைமுகத்திற்கு அருகே சுமார் 6 மில்லியன் டாலர் மதிப்புடையதாக மதிப்பிடப்பட்ட கொக்கைன் போதைப்பொருள் பொதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. Mackay வடக்கே 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Midge Point , Jimmys Rock படகுத் துறைமுகத்தில் சனிக்கிழமை காலை 8 மணியளவில் 40 கிலோகிராம் எடையுள்ளகொக்கைன் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போதைப்பொருள் பொதிகள் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கலாம் எனப் பொலிஸார் கருதுகின்றனர். முன்னதாக, அங்கு லாரி ஒன்று தீப்பற்றி எரிவதாகத் தகவல் கிடைத்து […]