பிரித்தானியாவின் புதிய குடியேற்ற முன்மொழிவுக்கு எதிராக சட்டநடவடிக்கை – புலம்பெயர்ந்தோர் கூட்டமைப்பு தீர்மானம்
பிரித்தானிய உள்துறை அமைச்சர் ஷபான மஹ்மூத் முன்வைத்துள்ள குடியேற்ற திட்டங்களுக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவில் நிரந்த குடியேற்றங்களை பெற 10 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும் என்ற முன்மொழிவு அரசியல் மற்றும் சமூக மட்டத்தில் பல கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிரித்தானியா முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திறன்மிகு புலம்பெயர்ந்தோர் கூட்டமைப்பு, இந்த குடியேற்ற திட்டங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய இவ் […]



