உலகம் செய்தி

ஈரானின் சமாதானத் திட்டம் என்ன?

  • May 3, 2026
  • 0 Comments

ஈரான் நாடு, அமெரிக்கா அரசிற்கு புதிய சமாதானத் திட்டம் ஒன்றை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திட்டம் பாகிஸ்தான் வழியாக அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சமாதானத் திட்டத்தில் மூன்று முக்கிய கட்டங்கள் உள்ளன. இது 30 நாட்களுக்குள் போர் நிறுத்தத்தை நிலையான அமைதியாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதென Al Jazeera தெரிவித்துள்ளது. திட்டத்தின் முக்கிய அம்சமாக, மத்திய கிழக்கில் மீண்டும் போர் ஏற்படாமல் இருக்க அனைத்து தரப்பும், குறிப்பாக இஸ்ரேல் உட்பட,  தாக்குதல் செய்யமாட்டோம் என்று உறுதி […]

உலகம் செய்தி

தெற்கு லெபனானில் 100 க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் கண்டுபிடிப்பு – இஸ்ரேல் ராணுவம் தகவல்

  • May 3, 2026
  • 0 Comments

தெற்கு லெபனான் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 100 க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த ஆயுதங்கள் ஹிஸ்புல்லாஅமைப்பால் பயன்படுத்தப்பட்டவை என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்களில் கலாஷ்னிகோவ் வகை துப்பாக்கிகள், சுமார் 20 ரொக்கெட்டுகள், குறி பார்த்து சுடும் துப்பாக்கிகள்  மற்றும் பிற போர் உபகரணங்கள் அடங்கும். இந்த ஆயுதங்கள் தெற்கு லெபனானின் Rshaf பகுதியில் உள்ள 401 ஆவது படைப்பிரிவின் வீரர்களால் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படைப்பிரிவு […]

இலங்கை செய்தி

காலி சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு 

  • May 3, 2026
  • 0 Comments

காலி சிறைச்சாலையினுள் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இன்று (03.05) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் தப்பியோட முற்பட்ட போது, சிறைச்சாலை அதிகாரிகளினால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைதான நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் தப்பியோட முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது சிறைச்சாலை அதிகாரிகளால் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில், கைதி ஒருவரின் தோள்பட்டை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. காயமடைந்த நபர் சிகிச்சைகளுக்காக காலி […]

ஐரோப்பா செய்தி

சமத்துவமின்மையை குறைப்பதே பசுமைக் கட்சியின் இலக்கு

  • May 3, 2026
  • 0 Comments

சமத்துவமின்மையை குறைப்பதும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதுமே தங்கள் கட்சியின் முக்கிய இலக்குகள் என பசுமைக் கட்சி தலைவர் Zack Polanski தெரிவித்துள்ளது. சமத்துவமின்மை அனைத்தையும் பாதிப்பதாக சுட்டிக்காட்டிய அவர் நிறுவனங்களின் செயற்பாடுகள் காரணமாகவே காலநிலை நெருக்கடியும் உருவாகிறது என கூறினார். மேலும் இதுவொரு சுற்றுச்சூழல் பிரச்சினை மட்டுமின்றி, சமூக சமத்துவ பிரச்சினையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பசுமைக் கட்சியின் முன்னுரிமைகள் சுற்றுச்சூழலிலிருந்து சமூக சமத்துவத்துக்கு விரிவடைந்துள்ளதாகவும், இது கட்சியின் புதிய அரசியல் அணுகுமுறையை காட்டுவதாகவும் Zack Polanski கூறியுள்ளார். […]

செய்தி

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு மஹிந்தவுக்கு அழைப்பு  

  • May 3, 2026
  • 0 Comments

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஆகியோரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளுக்காக அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது இதன்படி,மே மாதம் 12 ஆம் திகதி வாக்குமூலம் அளிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் விமான சேவைக்காக விமானங்களை கொள்வனவு செய்தபோது, 02 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றதாக […]

இலங்கை செய்தி

3,000 பேரை சிக்கவைத்த இணைய மோசடி வலை – பொலிஸார் அவசர எச்சரிக்கை

  • May 3, 2026
  • 0 Comments

இலங்கையில் அண்மைக்காலமாக கணினி மற்றும் கையடக்கத் தொலைபேசி மூலம் இடம்பெறும் மோசடிகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அரசியல்வாதிகள், வர்த்தகர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் உட்பட 3,000 க்கும் மேற்பட்டோர் இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கணினி மற்றும் தொழில்நுட்ப அறிவு குறைவாக உள்ளவர்களே இந்த மோசடியாளர்களின் முக்கிய இலக்கு பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவ்வாறானா மோசடிகளில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றவர்கள் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் […]

செய்தி தமிழ்நாடு

தமிழக சட்டமன்றத் தேர்தல் – வாக்கு எண்ணும் பணிகளுக்காக குவிக்கப்பட்ட ஒரு இலட்சம் பொலிஸார்

  • May 3, 2026
  • 0 Comments

சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகளுக்காக தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த23 ஆம் திகதி நிறைவடைந்த நிலையில்,  வாக்கு எண்ணும் பணிகள் நாளை காலை ஆரம்பமாகவுள்ளன. இதன்படி, 234 தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தமிழகம் முழுவதும் 62 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணும் பணிகள் காலை […]

ஐரோப்பா செய்தி

உள்ளாட்சித் தேர்தலில் தொழிற்கட்சிக்கு பெரும் பின்னடைவு – கருத்து கணிப்பில் தகவல்

  • May 3, 2026
  • 0 Comments

  எதிர்வரும்வரும் வியாழக்கிழமை பிரித்தானியாவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில், தொழிற்கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படலாம் என கருத்து கணிப்புகள்  தெரிவிக்கின்றன. பிரதமர் தலைமையிலான கட்சி, தற்போது வைத்திருக்கும் சுமார் 2,500 உள்ளாட்சி மன்ற இடங்களில் 2,000 வரை இழக்கும் அபாயம் காணப்படுவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தத் தேர்தலில் சுமார் 5,000 கவுன்சிலர் பதவிகளுக்கு 25,000 க்கும் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதனால், வாக்காளர்களுக்கு இதுவரை இல்லாத அளவிலான தெரிவு வாய்ப்பு உருவாகியுள்ளது. இரண்டு முக்கிய கட்சிகளுக்கான […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் எரிபொருள் நெருக்கடி- பயணிகளை ஒரே விமானத்தில் இணைக்க விமான நிறுவனங்களுக்கு அனுமதி

  • May 3, 2026
  • 0 Comments

இந்த கோடை காலத்தில் எரிபொருள் நெருக்கடி ஏற்படும் அபாயம் காணப்படுவதால், ஒரே இடத்திற்குச் செல்லும் பல விமான சேவைகளில் உள்ள பயணிகளை ஒன்றாக இணைத்து குறைவான விமானங்களை இயக்க விமான நிறுவனங்களுக்கு பிரித்தானிய அரசு தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது. ஒரே நாளில் ஒரே இலக்கை நோக்கி செல்லும் பல சேவைகள் உள்ள வழித்தடங்களில்,பயணிகளின்றி செல்லும் விமானங்களை குறைத்து எரிபொருள் சேமிப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இதற்கமைய சில பயணிகள் தங்களின் முன்பதிவு செய்யப்பட்ட […]

ஐரோப்பா செய்தி

ஆங்கிலக் கால்வாய் கடக்க முயன்ற சிறுபடகு விபத்து – இரண்டு பெண்கள் உயிரிழப்பு

  • May 3, 2026
  • 0 Comments

பிரான்ஸ் நாட்டிலிருந்து சிறிய படகில் ஆங்கிலக் கால்வாயை கடந்து செல்ல முயன்றபோது, இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடக்கு பிரான்சின் கடற்கரை பகுதியில் இருந்து புறப்பட்ட அந்தப் படகில் சுமார் 82 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்த இரண்டு பெண்களும் 20 வயதுடையவர்கள் என்றும், அவர்கள் சூடான் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மூன்று பயணிகள் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படகின் இயந்திரம் செயலிழந்ததால் அது கட்டுப்பாட்டை […]