3,000 பேரை சிக்கவைத்த இணைய மோசடி வலை – பொலிஸார் அவசர எச்சரிக்கை
இலங்கையில் அண்மைக்காலமாக கணினி மற்றும் கையடக்கத் தொலைபேசி மூலம் இடம்பெறும் மோசடிகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசியல்வாதிகள், வர்த்தகர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் உட்பட 3,000 க்கும் மேற்பட்டோர் இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கணினி மற்றும் தொழில்நுட்ப அறிவு குறைவாக உள்ளவர்களே இந்த மோசடியாளர்களின் முக்கிய இலக்கு பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்வாறானா மோசடிகளில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றவர்கள் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இணைய இணைப்புகள் அல்லது கோப்புகளை திறக்க வேண்டாம் என்றும், உறவினர்கள் வட்ஸ்அப் மூலம் பணம் கோரும் செய்தி கிடைக்கப்பெற்றால் உடனடியாக பணம் அனுப்பாமல் நேரடியாக தொடர்பு கொண்டு உறுதி செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வாட்ஸ்அப் கணக்குகளில் Two-Step Verification முறையை இயக்குமாறும், தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி விபரங்களை பகிரும் போது அவதானத்துடன் செயற்படுமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.





