செய்தி தமிழ்நாடு

தமிழக சட்டமன்றத் தேர்தல் – வாக்கு எண்ணும் பணிகளுக்காக குவிக்கப்பட்ட ஒரு இலட்சம் பொலிஸார்

சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகளுக்காக தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த23 ஆம் திகதி நிறைவடைந்த நிலையில்,  வாக்கு எண்ணும் பணிகள் நாளை காலை ஆரம்பமாகவுள்ளன.

இதன்படி, 234 தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தமிழகம் முழுவதும் 62 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

வாக்கு எண்ணும் பணிகள் காலை 08 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

இதற்காக ஆயிரக்கணக்கான பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வாக்கு எண்ணும் மையங்களில் மாத்திரம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடிவுகள் சுற்று வாரியாக அறிவிக்கப்படுவதுடன், இணையதளத்திலும் உடனுக்குடன் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி