சமத்துவமின்மையை குறைப்பதே பசுமைக் கட்சியின் இலக்கு
சமத்துவமின்மையை குறைப்பதும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதுமே தங்கள் கட்சியின் முக்கிய இலக்குகள் என பசுமைக் கட்சி தலைவர் Zack Polanski தெரிவித்துள்ளது.
சமத்துவமின்மை அனைத்தையும் பாதிப்பதாக சுட்டிக்காட்டிய அவர் நிறுவனங்களின் செயற்பாடுகள் காரணமாகவே காலநிலை நெருக்கடியும் உருவாகிறது என கூறினார்.
மேலும் இதுவொரு சுற்றுச்சூழல் பிரச்சினை மட்டுமின்றி, சமூக சமத்துவ பிரச்சினையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பசுமைக் கட்சியின் முன்னுரிமைகள் சுற்றுச்சூழலிலிருந்து சமூக சமத்துவத்துக்கு விரிவடைந்துள்ளதாகவும், இது கட்சியின் புதிய அரசியல் அணுகுமுறையை காட்டுவதாகவும் Zack Polanski கூறியுள்ளார்.
சமூக சேவைகள் மற்றும் பொதுமக்கள் நலனுக்காக அதிக வளங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் பசுமைக் கட்சி கவுன்சிலர்கள், மக்களின் பொதுச் சேவைகளை பாதுகாக்கவும், சமூக நம்பிக்கையை மீட்டெடுக்கவும் பணியாற்றுவார்கள் என அக்கட்சி தலைவர் Zack Polanski மேலும் தெரிவித்துள்ளார்.




