இலங்கை செய்தி

வெள்ளவத்தை நினைவேந்தல் நிகழ்வில் இடையூறு விளைவிப்பு

  • May 18, 2026
  • 0 Comments

கொழும்பு வெள்ளவத்தை கடற்கரை வீதியில் முள்ளிவாய்க்கால் நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இன்று மாலை 05 மணி முதல் மாலை 06 மணி வரை இடம்பெற்ற இந்நிகழ்வில் சிங்கள மற்றும் தமிழ் மக்கள் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். அத்துடன், கடற்கரையில் பூக்களை வீசி, உயிரிழந்த பொதுமக்களுக்கு இதயப்பூர்வமாக அஞ்சலி செலுத்தினர். அங்கு கலகமடக்கும் பொலிஸார் உட்பட பெருமளவு பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சிலர் மாத்திரம் நிகழ்வில் குழப்ப முயற்சித்ததாகவும் நிகழ்வில் பங்குபற்றியவர்களைத் தகாத வார்த்தைகளால் […]

இலங்கை செய்தி

இலங்கையின் 2026 வளர்ச்சி இலக்கு குறித்து சந்தேகம்?

  • May 18, 2026
  • 0 Comments

2026 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 05 வீதமாக காணப்படும் என ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டிருந்தாலும், உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற நிலை காரணமாக தற்போது துல்லியமான கணிப்பை வழங்குவது கடினமாக உள்ளதென மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். மார்ச் மாதத்திற்கு முன்னர் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 வீத அளவில் இருக்கும் என கணிக்கப்பட்டிருந்ததாக அவர் கூறினார். ஆனால் ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் உலகளாவிய பொருளாதார சூழ்நிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக, […]

இலங்கை செய்தி

யுத்த வீரர்கள் நினைவு தினம் – முப்படையைச் சேர்ந்த 5,289 பேருக்கு பதவி உயர்வு

  • May 18, 2026
  • 0 Comments

17ஆம் தடவையாக நாளை (19) அனுஷ்டிக்கப்படும் யுத்த வீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு, நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய முப்படைகளின் 5,289 பேருக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளது. நாட்டில் அமைதியை நிலைநிறுத்தவும் தாய்நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கவும் அளப்பரிய தியாகங்களையும் சிறப்பான சேவையையும் ஆற்றிய முப்படை வீரர்களை கௌரவித்து நன்றி செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் மே 19 ஆம் திகதி தேசிய யுத்தவீரர்கள் நினைவு தினம், அனுஷ்டிக்கப்படுகிறது. முப்படைத் தளபதிகளின் […]

இலங்கை ஐரோப்பா செய்தி

பிரதமர் லண்டன் நோக்கி பயணமானார்

  • May 18, 2026
  • 0 Comments

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அவர் இன்று பிற்பகல் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளார். லண்டன் நகரில் நடைபெறவுள்ள அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். பிரதமரின் இந்த விஜயத்தில் மேலும் இருவர் இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவர் தனது உத்தியோகபூர்வ பயணத்தை நிறைவு செய்து எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும் நாட்டிற்குத் திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் செய்தி

எபோலா (Ebola) வைரஸ் தொற்றால் அமெரிக்கர்களும் பாதிப்பு

  • May 18, 2026
  • 0 Comments

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் பரவி வரும் கொடிய எபோலா (Ebola) வைரஸ் தொற்றால் சுமார் ஆறு அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நோய்ப் பரவலை உலக சுகாதார அமைப்பு சர்வதேச அவசரநிலையாக அறிவித்துள்ளது. எபோலா (Ebola) வைரஸ் தொற்றால் 91 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. இந்த நோயால் இதுவரை சுமார் 350 பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பதாக கொங்கோ சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேவேளை கொங்கோவில் உள்ள சிறிய அமெரிக்கக் குழுவினரை பாதுகாப்பான தனிமைப்படுத்தல் மையத்துக்கு மாற்ற […]

செய்தி தமிழ்நாடு

மின் மற்றும் தொழில் வளர்ச்சி குறித்து முதலமைச்சர் விஜய் ஆலோசனை

  • May 18, 2026
  • 0 Comments

தமிழகத்தின் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய், மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். கோடை காலத்தில் மின்சாரம் போதுமான அளவில் உள்ளதா, வெளிமாநிலங்களில் இருந்து எவ்வளவு மின்சாரம் வாங்கப்படுகிறது உள்ளிட்ட விபரங்களை அவர் கேட்டறிந்தார். மேலும், மின்தட்டுப்பாடு ஏற்படாமல் தொடர்ந்து சீரான மின்விநியோகம் வழங்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள் குழுவினர் முதலமைச்சர் விஜய்யை சந்தித்து கலந்துரையாடினார். தமிழ்நாட்டின் […]

ஐரோப்பா செய்தி

ஸ்டார்மரின் தலைமையை கேள்விக்குட்படுத்துவது முட்டாள்தனமானது என விசனம்

  • May 17, 2026
  • 0 Comments

பிரதமர் ஸ்டார்மர் பதவி விலக மாட்டார் என கலாச்சாரம், ஊடகம் மற்றும் விளையாட்டுத் துறைக்கான செயலாளர் Lisa Nandy தெரிவித்துள்ளார். பிரதமரின் தலைமையை கேள்விக்குட்படுத்துவது முட்டாள்தனமானது என்றும் அவர் கூறியுள்ளார். உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் ஸ்டார்மரின் பிரதமர் பதவி சவாலுக்கு உட்படுத்தப்படலாம் என தகவல்கள் வெளி வரும் நிலையில் Lisa Nandy இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார். மக்கள் பிரதமருக்கு சவால் விடுக்க விரும்பினால் அதற்கான அதிகாரப்பூர்வ நடைமுறை உள்ளது என அவர் சுட்டிக்காட்டினார். மேலும், அரசு […]

இந்தியா செய்தி

இந்திய பிரதமர் மோடி ஸ்வீடனுக்கு விஜயம்

  • May 17, 2026
  • 0 Comments

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று ஸ்வீடனுக்கு விஜயம் மேற்கொள்கிறார். இந்தியா மற்றும் ஸ்வீடன் இடையிலான வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே இந்த பயணத்தின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்படுகிறது 2018 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிரதமர் மோடி ஸ்வீடனுக்கு செல்லும் முதல் பயணம் இதுவாகும். இந்த சந்திப்பில் இரு நாட்டு தலைவர்களும் இந்தியா மற்றும் ஸ்வீடன் உறவுகளை குறித்து விரிவாக கலந்துரையாடுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது மேலும் பசுமை ஆற்றல் […]

ஐரோப்பா செய்தி

பலஸ்தீன ஆதரவு நடவடிக்கை – யெவெட் கூப்பர் எழுதிய செய்தித்தாள் கட்டுரையால் சர்ச்சை

  • May 17, 2026
  • 0 Comments

வெளியுறவு மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான செயலாளர் யெவெட் கூப்பர் (Yvette Cooper) எழுதிய செய்தித்தாள் கட்டுரை தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பலஸ்தீன ஆதரவு இயக்கமான பலஸ்தீன நடவடிக்கை குறித்து அவர் எழுதிய அந்தக் கட்டுரை, நீதிமன்ற விசாரணையை பாதிக்கக்கூடும் என அரசுத் தரப்பு வழக்கறிஞர் சேவை (CPS) முன்கூட்டியே எச்சரித்திருந்தது என தகவல்கள் வெளியாகியுள்ளன. 2024 ஆம் ஆண்டு, இஸ்ரேலிய ஆயுத உற்பத்தி நிறுவனமான எல்பிட் சிஸ்டம்ஸ் யுகே (Elbit Systems UK) தொழிற்சாலையில் இடம்பெற்ற உடைப்பு […]

ஐரோப்பா செய்தி

ஸ்டார்மர் இன்றி தொழிற்கட்சி சிறப்பாக செயல்படும் என மக்கள் நம்புவதாக கருத்து கணிப்பில் தகவல்

  • May 17, 2026
  • 0 Comments

பிரித்தானிய பிரதமர் Starmer இன்றி தொழிற்கட்சி சிறப்பாக செயல்படும் என மக்கள் நம்புவதாக Ipsos நிறுவனத்தின் தலைவர் கெல்லி பீவர் (Kelly Beaver) தெரிவித்துள்ளார். Sky News இன் “Sunday Morning” நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார் பொதுமக்களில் பெரும்பாலானோர் தற்போதைய அரசாங்கம் மற்றும் பிரதமர் மீது அதிருப்தியைக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆய்வின்படி, நான்கில் மூன்று பேர் பிரதமர்மீது அதிருப்தியை கொண்டிருப்பதாகவும் மூன்றில் இரண்டு பேர் அவர் தலைமை […]