செய்தி தமிழ்நாடு

மின் மற்றும் தொழில் வளர்ச்சி குறித்து முதலமைச்சர் விஜய் ஆலோசனை

தமிழகத்தின் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய், மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

கோடை காலத்தில் மின்சாரம் போதுமான அளவில் உள்ளதா, வெளிமாநிலங்களில் இருந்து எவ்வளவு மின்சாரம் வாங்கப்படுகிறது உள்ளிட்ட விபரங்களை அவர் கேட்டறிந்தார்.

மேலும், மின்தட்டுப்பாடு ஏற்படாமல் தொடர்ந்து சீரான மின்விநியோகம் வழங்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள் குழுவினர் முதலமைச்சர் விஜய்யை சந்தித்து கலந்துரையாடினார்.

தமிழ்நாட்டின் நீண்டகால பொருளாதார வளர்ச்சி இலக்குகளுக்கு ஏற்ப, மாநிலத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் முதலீடுகளை அதிகரிப்பது குறித்து இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கூட்டமைப்பு வழங்கி வரும் பங்களிப்பை முதலமைச்சர் பாராட்டியதுடன், அவர்கள் தெரிவித்த கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

மேலும், தமிழ்நாட்டை நாட்டின் முன்னணி பொருளாதார சக்தியாக மாற்றும் முயற்சியில் தொடர்ந்து ஆதரவும் ஆலோசனைகளும் வழங்குமாறு பிரதிநிதிகள் குழுவினரிடம் தமிழக முதலமைச்சர் விஜய் கேட்டுக்கொண்டார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி