வெள்ளவத்தை நினைவேந்தல் நிகழ்வில் இடையூறு விளைவிப்பு
கொழும்பு வெள்ளவத்தை கடற்கரை வீதியில் முள்ளிவாய்க்கால் நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
இன்று மாலை 05 மணி முதல் மாலை 06 மணி வரை இடம்பெற்ற இந்நிகழ்வில் சிங்கள மற்றும் தமிழ் மக்கள்
தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
அத்துடன், கடற்கரையில் பூக்களை வீசி, உயிரிழந்த பொதுமக்களுக்கு இதயப்பூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.
அங்கு கலகமடக்கும் பொலிஸார் உட்பட பெருமளவு பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
சிலர் மாத்திரம் நிகழ்வில் குழப்ப முயற்சித்ததாகவும் நிகழ்வில் பங்குபற்றியவர்களைத் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும்
கூறப்படுகிறது
எனினும், பொலிஸாரின் பாதுகாப்போடு நிகழ்வு உரிய முறையில் சிறப்பாக இடம்பெற்று முடிந்தது.




