இலங்கை செய்தி

இலங்கையின் 2026 வளர்ச்சி இலக்கு குறித்து சந்தேகம்?

2026 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 05 வீதமாக காணப்படும் என ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டிருந்தாலும், உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற நிலை காரணமாக தற்போது துல்லியமான கணிப்பை வழங்குவது கடினமாக உள்ளதென மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதத்திற்கு முன்னர் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 வீத அளவில் இருக்கும் என கணிக்கப்பட்டிருந்ததாக அவர் கூறினார்.

ஆனால் ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் உலகளாவிய பொருளாதார சூழ்நிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக, எதிர்வரும் மாதங்களில் நிலைமை எவ்வாறு மாறும் என்பதை உறுதியாகக் கூற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த நெருக்கடி அடுத்த மூன்று மாதங்களுக்குள் குறைந்து, அதன் பின்னர் பொருளாதார நிலைமை வழமைக்குத் திரும்பினால், வளர்ச்சி 5 வீதத்தை விட சற்று குறையக்கூடும் என அவர் தெரிவித்தார்.

ஆனால், தற்போதைய பாதிப்பு 6 மாதங்கள் அல்லது 9 மாதங்கள் வரை நீடித்தால், அது பொருளாதார வளர்ச்சியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!