பிரதமர் லண்டன் நோக்கி பயணமானார்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அவர் இன்று பிற்பகல் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளார்.
லண்டன் நகரில் நடைபெறவுள்ள அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
பிரதமரின் இந்த விஜயத்தில் மேலும் இருவர் இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவர் தனது உத்தியோகபூர்வ பயணத்தை நிறைவு செய்து எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும் நாட்டிற்குத் திரும்புவார் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.




