சந்தேகநபர்களை வீட்டுக்காவலில் வைக்கும் முறையை அறிமுகப்படுத்த பரிசீலனை
சிறைச்சாலைகளில் ஏற்படும் நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொருத்தமான வழக்குகளில், நீதிமன்றக் காவல் அல்லது சிறைத்தண்டனைக்கு மாற்றாக, சந்தேக நபர்களையும் தண்டனை பெற்றவர்களையும் வீட்டுக் காவலில் வைக்க அனுமதிக்கும் சட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. நீதிமன்றக் காவலுக்கு மாற்றாக வீட்டுக் காவலுக்கான விதிகளை நிறுவுவதற்காக அமைச்சரவையால் கொள்கை ஒப்புதல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, சட்ட வரைவாளர் இது தொடர்பான சட்டத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். 2025 ஜூன் 23 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், சட்ட வரைவாளரால் […]




