ஐரோப்பிய நாடுகளில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு
குளிர்காலத்திற்கு முன்னதாக எரிவாயுவை சேமித்துவைக்க வேண்டிய சூழல் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வளைகுடா பகுதியில் நிலவும் போர் பதற்றம் காரணமாக பெரும்பாலான திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதிகள் ஆசியாவிற்கு அதிகளவில் திருப்பி விடப்படுவதால், இந்நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஈரானுக்கு எதிரான போர் மற்றும் உலகின் எரிவாயுப் போக்குவரத்தில் சுமார் 20 சதவீதம் பங்களிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி மூடல் காரணமாக இயற்கை எரிவாயு விநியோகம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய எரிவாயு சேமிப்பிடம் ஜூலை மாத […]




