இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்
இந்தியா – அமெரிக்கா இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, “ஏப்ரல் 20 முதல் 23 வரை, அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் அந்நாட்டின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை உயரதிகாரிகளுடன் இந்திய பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தைக்கு இந்திய தரப்பில் தர்பன் ஜெயின் தலைமை தாங்கினார். இந்த பேச்சுவார்த்தையின்போது, சந்தை […]




