Consent Preferences
செய்தி

ஐரோப்பிய நாடுகளிலேயே நெதர்லாந்தில் குறைந்த வேலைவாரம் – யூரோஸ்டாட் தகவல்

  • November 27, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலேயே நெதர்லாந்தில் மிகக் குறைந்த சராசரி வேலை வாரம் பதிவாகியுள்ளது. யூரோஸ்டாட் Eurostat வெளிப்படுத்தியுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான தரவுகளில் இந்த விடயம் தெரிவியவந்துள்ளது. இதன்படி ஐரோப்பிய ஒன்றியத்தில் சராசரி வேலை வாரம்   35.9 மணிநேரமாக  காணப்படுகின்ற நிலையில், நெதர்லாந்தில் 31.9 மணிநேரமாக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து டென்மார்க்கும் ஜெர்மனியும் வாரத்திற்கு 33.9 மணிநேரத்துடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. அதே சமயம் கிரீஸ் 39.6 மணிநேரத்துடன் மிக நீண்ட சராசரியைப் பதிவு செய்துள்ளது. […]