Consent Preferences
இலங்கை

நெதர்லாந்தில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள 40 நாய்கள் – காவல் பணியில் சேர்க்க தீர்மானம்

  • November 29, 2026
  • 0 Comments

நெதர்லாந்திலிருந்து 40 நாய்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. காவல்துறையின் அதிகாரப்பூர்வ நாய் பிரிவினரால் பயிற்சி அளிக்கப்பட்டு, பணியில் ஈடுபடுத்தப்படுவதற்காக, அவை கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய ஒரு வயதுக்குட்பட்ட ‘ஜெர்மன் ஷெப்பர்ட்’, ‘லாப்ரடார்’, ‘பெல்ஜியன் மலிநாய்ஸ்’ மற்றும் ‘பீகிள்’ இனத்தைச் சேர்ந்த நாய்களே இவ்வாறு கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாய்களுக்கு, வெடிபொருட்களைக் கண்டறிந்து அடையாளம் காணுதல், போதைப்பொருள் சோதனைகள் மற்றும் நாட்டில் நிகழும் பல்வேறு குற்றங்களின் விசாரணை போன்ற சிறப்புப் பகுதிகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளன.