கீவின் தொடர் தாக்குதல் – கிரிமியா தீபகற்பத்தில் பெட்ரோல் விற்பனை இடைநிறுத்தம்
ரஷ்யாவின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் உள்ள கிரிமியா தீபகற்பத்தில் பெட்ரோல் விற்பனை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 9:00 மணி முதல், கிரிமியாவில் உள்ள எரிபொருள் நிலையங்களில் தனிநபர்கள் மற்றும் சட்ட நிறுவனங்களுக்கான ரொக்கம், ரொக்கமில்லா பரிவர்த்தனைகள் மற்றும் பற்றுச்சீட்டுகள் மூலமான எரிபொருள் விற்பனைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. “கிரிமியா குடியரசின் செயல்பாடு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே எரிபொருள் விற்கப்படும்,” என்று அப்பகுதியின் தலைவர் செர்ஜி அக்சியோனோவ் (Sergey Aksyonov) தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் குடியிருப்பாளர்களை […]





