வெனிசுலா பதில் ஜனாதிபதி, டெல்சி ரோட்ரிக்ஸ் (Delcy Rodríguez), ஐநாவின் அனைத்து மீட்புக் குழுக்களையும் களமிறக்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளார். உலகம் செய்தி

100 இற்கு மேற்பட்ட கட்டிடங்கள் சரிவு

  • June 25, 2026
  • 0 Comments

வெனிசுலாவின் ‘லா குவைரா’ (La Guaira) மாநிலத்தில் 100-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதாக ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைக்கும் அலுவலகம் (OCHA) தெரிவித்துள்ளது. வெனிசுலா பதில் ஜனாதிபதி, டெல்சி ரோட்ரிக்ஸ் (Delcy Rodríguez), ஐநாவின் அனைத்து மீட்புக் குழுக்களையும் களமிறக்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளார். இக்குழுக்கள் அங்கு வருகை தரும் ஏனைய சர்வதேச மீட்புக் குழுக்களுக்குத் தேவையான தளவாடங்கள் மற்றும் இதர ஆதரவை வழங்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மீட்புக் குழுக்கள் லா குவைரா மற்றும் தலைநகர் […]

சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுயாதீனம் என்பவற்றை உறுதிப்படுத்துவதற்காகவே நாம் ஆட்சிக்கு வந்தோம். அரசியல் இலங்கை செய்தி

கோழிப்பண்ணைமீது நரிக்கு ஏன் அக்கறை? கடுப்பாகிய நீதி அமைச்சர்

  • June 25, 2026
  • 0 Comments

நீதித்துறை பற்றி எதிரணி உறுப்பினர்கள் பேசுவதானது, கோழிப்பண்ணை மீது நரி அக்கறை காட்டுவது போல் உள்ளது என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், “சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுயாதீனம் என்பவற்றை உறுதிப்படுத்துவதற்காகவே நாம் ஆட்சிக்கு வந்தோம். கடந்த காலங்களில் அதிகாரம் படைத்தவர்களுக்கு ஒரு விதத்திலும், சாதாரண மக்களுக்கு வேறு விதத்திலுமே சட்டம் அமுல்படுத்தப்பட்டது. கட்சி தாவினால் வழக்குகள் மாயமாகும் நிலையும் அன்று […]

அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தல் எப்போது?

  • June 25, 2026
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தல் தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் நிச்சயம் தேர்தல் நடத்தப்படும் என்று ஆளுங்கட்சி பிரதம கொறடாவும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். மாகாணசபைத் தேர்தல் எப்போது நடத்தப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜேசி அலவதுவல நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதற்கு பதிலளித்த அமைச்சர், “மாகாணசபைத் தேர்தல் குறித்து நாடாளுமன்ற தெரிவுக்குழு ஆராய்ந்து வருகின்றது. மாகாணசபைத் தேர்தல் சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டவுடன் மாகாணசபைத் தேர்தலை விரைவாக […]

வெனிசுலாவில் ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

164 பேர் பலி – 971 பேர் காயம்: சர்வதேச உதவி கோருகிறது ஐ.நா.

  • June 25, 2026
  • 0 Comments

வெனிசுலாவில் ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இதுவரை குறைந்தபட்சம் 164 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 971 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார். குறிப்பாக லா குவைரா மாநிலம் இடிபாடுகளால் சூழப்பட்ட ஒரு பேரிடர் மண்டலமாக மாறியுள்ளது. நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ள நிலையில், அங்கிருந்து குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவங்கள் நம்பிக்கை அளிக்கின்றன. இந்த நிலநடுக்கம் கடந்த நூற்றாண்டில் அந்தப் பிராந்தியத்தில் […]

நிலநடுக்கத்தில் 32 பேர் இறந்துள்ளனர் என்றே அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கின்றது. ஆனால் ஆயிர்ககணக்கானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. உலகம் செய்தி

ஊடக கட்டுப்பாடுகளை வெனிசுலா உடன் நீக்க வேண்டும் – ஐ.நா.

  • June 25, 2026
  • 0 Comments

வெனிசுலாவில் நிலவும் கடுமையான அரசியல் மற்றும் சமூகச் சூழலில், தகவல் பரிமாற்றத்திற்கான தடைகளை உடனடியாக நீக்குமாறு ஐ.நா.சபை அந்நாட்டு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மீதான கட்டுப்பாடுகள் மக்களின் உயிர் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக மாறக்கூடும் என்று ஐநா எச்சரித்துள்ளது. தற்போதைய நெருக்கடியான நிலையில், பொதுமக்களுக்குத் துல்லியமான தகவல்கள் கிடைப்பதை உறுதி செய்வது அதிகாரிகளின் முக்கிய கடமையாகும் என்று ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளது. இக்கட்டான இத்தருணத்தில் வெளிப்படையான ஊடகச் செயல்பாடுகள் மட்டுமே பேரழிவுகளைத் தடுக்க உதவும் என்று […]

இந்தியாவில், ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துக்களில் சுமார் 1.73 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்; இது உலகளாவிய சாலை விபத்து மரணங்களில் சுமார் 11 சதவீதமாகும். இந்தியா செய்தி

இந்தியாவில் மிகவும் ஆபத்தான பயண நேரம் – வெளியான புதிய ஆய்வு

  • June 25, 2026
  • 0 Comments

இந்தியாவில் இரவு 9 மணி முதல் 10 மணி வரையிலான நேரமே மிகவும் ஆபத்தான பயண நேரம் என ஓர் அறிக்கை தெரிவிக்கிறது. சுனோ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் வெளியிட்ட ‘இந்தியா சாலைப் பாதுகாப்பு அறிக்கை 2026’, விபத்துகள் நிகழும் நேரங்களை வெளிப்படுத்துகிறது. இந்த அறிக்கை, இரவு நேரங்களில் ஓட்டுநரின் நடத்தை, சோர்வு மற்றும் சாலைப் பாதுகாப்பு குறித்த கவலைகளை எடுத்துரைக்கிறது. இந்த அறிக்கை, 17 மாநிலங்களில் 27,000க்கும் மேற்பட்ட பயனர்கள் மற்றும் 4.5 மில்லியனுக்கும் அதிகமான […]

பில் கேட்ஸின் கூற்றுப்படி, இந்த உறவுகள் எப்ஸ்டீனுடனான எனது சந்திப்புகளுடன் தொடர்புடையவை அல்ல, ஆனால் எப்ஸ்டீன் இந்தத் தகவலையும் சில பொய்க் குற்றச்சாட்டுகளையும் பயன்படுத்தி என்னை மீண்டும் அவருடன் இணைய வைக்க முயன்றார். உலகம் செய்தி

‘எப்ஸ்டீன் என்னை மிரட்ட முயன்றார்’ – உறவுகள் இருந்ததை ஒப்புக்கொண்ட பில் கேட்ஸ்

  • June 25, 2026
  • 0 Comments

அமெரிக்க காங்கிரஸின் மேற்பார்வைக் குழுவின் முன் மூடிய அறைக்குள் அளித்த வாக்குமூலத்தில், மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் தனக்கு மூன்று பெண்களுடன் உறவுகள் இருந்ததை ஒப்புக்கொண்டார். அதேசமயம், பிரபல பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு அவருடைய இரண்டு உறவுகள் பற்றித் தெரிந்திருந்தது. ரஷ்ய ஜிம்னாஸ்ட் மிலா அன்டோனோவா மற்றும் அணு விஞ்ஞானி கரிமா நிக்மதுலினா ஆகியோருடனான தனது உறவுகள் குறித்து ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்குத் தெரிந்திருந்தது என்று பில் கேட்ஸ் கூறினார். மேலும், தொழிலதிபர் ஆலிஸ் ஜேக்கப்ஸ் […]

வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள கடுமையான நிலநடுக்கப் பேரழிவுகள் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இந்தியா தனது ஆழந்த கவலையை வெளியிட்டுள்ளது. இந்தியா செய்தி

வெனிசுலாவுக்கு தோள்கொடுக்க இந்தியா தயார்

  • June 25, 2026
  • 0 Comments

“வெனிசுலாவிற்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு இந்தியா தயாராக உள்ளது.” – என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள கடுமையான நிலநடுக்கப் பேரழிவுகள் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இந்தியா தனது ஆழந்த கவலையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் இந்திய பிரதமரின் X பதிவில் கூறப்பட்டுள்ளவை வருமாறு, “வெனிசுலாவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பேரழிவுகள் குறித்து அறியும்போது ஆழ்ந்த வேதனையடைகிறோம். இந்திய மக்களின் சார்பில், வெனிசுலா அரசுக்கும் அந்நாட்டு மக்களுக்கும், குறிப்பாகத் […]

Donald Trump has labelled Andy Burnham “extremely liberal”, in his first public comments about the former Greater Manchester mayor since he emerged as the frontrunner to replace Keir Starmer. ஐரோப்பா செய்தி

Andy Burnhamமீது ட்ரம்ப் விமர்சனக்கணை தொடுப்பு

  • June 25, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் புதிய பிரதமராவதற்கான பந்தயத்தில் முன்னணியில் இருக்கும் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) குறித்து அமெரிக்க ஜனாதிபதிடொனால்ட் டிரம்ப் தனது முதல் விமர்சனக் கணையைத் தொடுத்துள்ளார். பர்ன்ஹாமை ஒரு “தீவிர தாராளவாதி” (Extremely Liberal) என்று விமர்சித்துள்ளார். இது தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட ட்ரம்ப், Andy Burnham எண்ணெய் ஆய்வுக்காக வட கடலை (North Sea) திறக்க வாய்ப்பில்லை என்றும், பிரித்தானியா வீழ்ந்து கொண்டிருக்கிறது என்றும் கூறினார். இதன் மூலம், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட லேபர் கட்சியின் […]

இவ்வருடத்துக்குள் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும். இதற்குரிய ஏற்பாடுகளை நீதி அமைச்சு முன்னெடுத்துவருகின்றது. அரசியல் இலங்கை செய்தி

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம்: ஜனாதிபதி உறுதி

  • June 25, 2026
  • 0 Comments

பயங்கரவாத தடைச்சட்டம் இவ்வருடத்துக்குள் நீக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (25) உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்படி தகவலை வெளியிட்டார். “பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு மக்கள் தொடர்ந்து போராடிவந்தனர். நீண்டநாட்களாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுவருகின்றது. எனவே, இவ்வருடத்துக்குள் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும். இதற்குரிய ஏற்பாடுகளை நீதி அமைச்சு முன்னெடுத்துவருகின்றது. அதேபோல குற்ற கும்பல் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களைத் தடுப்பதற்காக புதிய சட்டம் கொண்டுவரப்படும். கருத்து சுதந்திரம் உட்பட மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையிலேயே […]