உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரானுக்கு எதிரான போர்ச் செலவு 37.5 பில்லியன் டொலர்களாக உயர்வு

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் போர்ச் செலவு இதுவரை 37.5 பில்லியன் டொலர்களாக உயர்த்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் போர்ச் செலவு இதுவரை 37.5 பில்லியன் டொலர்களாக உயர்த்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

தீவிர குண்டுவீச்சுகள் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், போருக்கான அவசர நிதியைக் கோரி, இது தொடர்பாகக் கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அமெரிக்க இடைக்காலத் தேர்தல் நடைபெற இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில், தலைவர் டொனால்ட் ட்ரம்பின் குடியரசுத் கட்சியினர் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபைகளில் பெரும்பான்மையைத் தக்கவைக்கக் கடுமையான போராட்டத்தை எதிர்கொள்ள நேரிடலாம் எனக் கருதப்படுகிறது.

அதேவேளையில், மக்களிடையே பிரபலமடையாத இந்த ஈரான் போரையும், நாட்டின் பொருளாதாரச் சுமையையும் இணைத்து ஜனநாயகக் கட்சியினர் கருத்துக்கணிப்புகளில் முன்னிலை பெற்று வருகின்றனர்.

வாஷிங்டனில் நடைபெற்ற விசாரணையின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேசிய ஹெக்செத், இந்த 37.5 பில்லியன் டொலரில் போரின் சில குறிப்பிட்ட அம்சங்களும், செப்டம்பர் 30 வரையிலான எதிர்பார்க்கப்படும் செலவுகளும் அடங்கும் எனக் கூறினார்.

இருப்பினும், பென்டகன் இந்தத் தொகையை எவ்வாறு கணக்கிட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை. போரின் முதல் ஆறு நாட்களில் குறைந்தது 11.3 பில்லியன் டொலர் செலவானதாக ட்ரம்ப் நிர்வாகம் மதிப்பிட்டுள்ளதாகக் கடந்த மார்ச் மாதம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்குத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

ஈரான் மோதல் தொடர்பான செலவுகள் உட்பட, சுமார் 90 பில்லியன் டொலர் மேலதிக நிதியை வழங்குமாறு ட்ரம்ப் கடந்த மாதம் காங்கிரஸிடம் கோரியிருந்தார். இது, போரினால் விரக்தியடைந்துள்ள மற்றும் இடைக்காலத் தேர்தலை எதிர்கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மற்றொரு அரசியல் மோதலுக்கு வழிவகுத்துள்ளது.

இந்தப் போர் பென்டகனின் கிட்டத்தட்ட 1 டிரில்லியன் டொலர் வரவு செலவுத் திட்டத்தை அதிகளவில் பாதித்துள்ளதுடன், இராணுவப் பணியாளர்களுக்கான நிதி ஒதுக்கீட்டிற்கும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.

ஈரானுக்கு எதிரான போரில் கொல்லப்பட்ட அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை வார இறுதியில் 18 ஆக உயர்ந்த அதே வேளையில், சுமார் 430 அமெரிக்க வீரர்கள் காயமடைந்துள்ளனர். ஜூலை 7 முதல் 100 இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ள போதிலும், அவர்களில் 96 சதவீதம் பேர் மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளதாகப் பென்டகன் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி