இலங்கை செய்தி

இலங்கை முதலீட்டு சபைக்கு புதிய தலைவர் நியமனம்

  • June 30, 2026
  • 0 Comments

இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும், ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ , ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் ஏனைய உறுப்பினர்களாக விஷ் கோவிந்தசாமி, ஹர்ஷனி ரந்திலிகம, மங்கள கருணாரத்ன மற்றும் கே. ஏ. விமலேந்திரராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான நியமனக் கடிதங்களை, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க , இன்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளித்தார்.

டேமியன் பெர்னாண்டோ, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஆய்வுகளுக்கான முதுமாணிப்(Master of Defence Studies) பட்டத்தையும், லண்டன் கிங்ஸ் கல்லூரியில் சர்வதேச பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகளுக்கான முதுமாணிப் (Master of Arts in International Security and Strategy) பட்டத்தையும் பெற்றுள்ளார். இலங்கை செய்தி

இலங்கையில் புதிய கடற்படைத் தளபதி நியமனம்

  • June 30, 2026
  • 0 Comments

இலங்கை கடற்படையின் பதவி நிலை பிரதானியாகக் கடமையாற்றிய ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவுக்கு, வைஸ் அட்மிரல் பதவிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு, இலங்கை கடற்படையின் 27 ஆவது கடற்படைத் தளபதியாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இன்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளித்தார். இந்த நியமனம் ஜூலை முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளதுடன், தற்போதைய கடற்படைத் […]

" என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்க் குற்றச்சாட்டுக்கள், போலிக் குற்றச்சாட்டுக்கள். அநுரவின் வாயைப் போலவே எல்லாம் பொய்" என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார். இலங்கை செய்தி

” எல்லாமே பொய்” – சிறைச்சாலை பஸ்சுக்குள் இருந்து சீறிய பிள்ளையான்

  • June 30, 2026
  • 0 Comments

என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்க் குற்றச்சாட்டுக்கள், போலிக் குற்றச்சாட்டுக்கள். அநுரவின் வாயைப் போலவே எல்லாம் பொய்” என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அவரை எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் அ.தர்சினி இன்று உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றத்திலிருந்து சிறைச்சாலை வாகனத்துக்குக் கொண்டுசெல்வதற்காக பிள்ளையான் சிறைச்சாலை பஸ்சுக்குள் ஏற்றப்பட்டார். சிறைச்சாலை பஸ்சுக்குள் இருந்த […]

srilankalatestnews,SrilankaLatestNews,srilankanews,srilankatamilnewstoday, newstoday,news,australianews,australia,todaynews,latestnews,bestnews செய்தி விளையாட்டு

ஈரான் வீரர்களை நெகிழ வைத்த மெக்சிகோ மக்கள்

  • June 30, 2026
  • 0 Comments

அரசியல் பதற்றங்கள் மற்றும் கடுமையான நெருக்குவாரங்களுக்கு மத்தியில் உலகக் கிண்ணக் கால்பந்து தொடரில் பங்கேற்ற ஈரான் அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ள போதிலும், மெக்சிகோ நாட்டு மக்களின் அன்பால் நெகிழ்ச்சியோடு விடைபெற்றுள்ளது. 2026 உலகக் கிண்ணக் காற்பந்துத் தொடரின் நாக்-அவுட் (Knockout) சுற்றுக்குத் தகுதிபெறும் வாய்ப்பை இழந்து ஈரான் அணி (Team Melli) தொடரிலிருந்து துரதிர்ஷ்டவசமாக வெளியேறியுள்ளது. சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் அல்ஜீரியாவுக்கு எதிராக ஆஸ்திரியா பெற்ற இறுதிநேர சமநிலை (Equaliser) காரணமாக, ஈரான் அணியின் அடுத்த சுற்று […]

239 பேரை ஏற்றிச் சென்ற போயிங் 777 விமானம், கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, ​​2014 மார்ச் எட்டாம் திகதி ரேடாரில் இருந்து திடீரென மறைந்து போனது. உலகம் செய்தி

காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணி நீடிப்பு

  • June 30, 2026
  • 0 Comments

காணாமல் போன மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் MH370-ஐத் தேடும் பணியை மலேசியா மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது. விமானப் போக்குவரத்து வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் நீண்டகாலமாகத் தொடரும் மர்மங்களில் ஒன்றாக இந்த விபத்து கருதப்படுகின்றது. 239 பேரை ஏற்றிச் சென்ற போயிங் 777 விமானம், கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, ​​2014 மார்ச் எட்டாம் திகதி ரேடாரில் இருந்து திடீரென மறைந்து போனது. விமானத்தில் இருந்த பயணிகளில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு பேர் சீன நாட்டவர்கள் ஆவர். […]

ஐரோப்பா செய்தி

புகலிட கோரிக்கையாளர்களுக்கு பிரித்தானியா அரசாங்கம் வைத்த செக்: எழும் கடும் விமர்சனம்

  • June 30, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் தஞ்சம் கோரப்பட்டவர்கள், குடியமர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெறுவதற்கு முன்பு, தங்குமிடம் மற்றும் அடிப்படை வாழ்க்கைச் செலவுகளுக்காக அரசாங்கத்திற்குச் சுமார் 10,000 பவுண்ட்ஸ் செலுத்த வேண்டியிருக்கும் என்று அதிகாரிகள் திங்களன்று அறிவித்தனர். பிரித்தானிய அரசியலில் குடிவரவு மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாக உருவெடுத்துள்ள நிலையில், இந்த விடயம் வாக்காளர்களின் முதன்மையான கவலைகளில் ஒன்றாகத் தொடர்ந்து இடம்பிடித்துள்ளது. முன்மொழியப்பட்ட விதிகளின்படி, திருப்பிச் செலுத்தும் தொகையானது வருமானத்தின் அடிப்படையில் சோதிக்கப்படும் என்றும், ஒரு குறிப்பிட்ட வருமான வரம்பிற்கு மேற்பட்ட வயது […]

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஜெர்மனி தனது முழுமையான ஆதரவை இந்த சந்திப்பின் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. ஐரோப்பா செய்தி

‘ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பு’ – அமெரிக்கா, ஜெர்மன் ஆராய்வு

  • June 30, 2026
  • 0 Comments

ஜெர்மனியின் வெளிவிவகார அமைச்சர் Johannes Wadephul மற்றும் அமெரிக்க ராஜாங்க செயலர் Marco Rubio ஆகியோருக்கு இடையே வாஷிங்டனில் முக்கிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஜெர்மனி தனது முழுமையான ஆதரவை இந்த சந்திப்பின் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலில், இராஜதந்திர ரீதியாக சிக்கல்களைத் தீர்க்க இந்த ஒப்பந்தம் ஒரு நல்ல வாய்ப்பு என்று வேட்புல் கருதுகிறார். கடல்சார் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்யவும், ஈரானின் […]

அரச ஊழியர்களுக்கு 20 கிலோ அரிசி கடனுக்கு வழங்கப்படுமாம். கடனை திருப்பி செலுத்தாவிட்டால் சோறு பானையை ஆட்சியாளர்கள் தூக்கிச்செல்லக்கூடும். 12 லட்சம் ரூபாவுக்கு கார் வழங்கப்படும் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், நாட்டை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளனர். அரசியல் இலங்கை செய்தி

புலனாய்வுப் பிரிவு குறித்து பதறும் நாமல் எம்.பி.

  • June 30, 2026
  • 0 Comments

“ நாட்டில் உளவுப் பிரிவு திட்டமிட்ட அடிப்படையில் பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. ” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எம்.பி. தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “தமது இயலாமையை மூடிமறைப்பதற்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், அடக்குமுறையை கையில் எடுத்துள்ளது. நாம் விசாரணை நடத்த வேண்டாம் எனக் கூறவில்லை. இந்த ஆட்சியில் நடந்த மோசடிகள் பற்றியும் விசாரணை அவசியம் என்றே கூறுகின்றோம். அரச ஊழியர்களுக்கு 20 கிலோ அரிசி […]

ஜூலை 2 முதல் 8 ஆம்திகதிவரை திட்டமிடப்பட்டுள்ள இந்தச் சுற்றுப்பயணத்தில் அவர் டென்மார்க், ஸ்வீடன், பின்லாந்து மற்றும் நார்வே ஆகிய நாடுகளுக்குச் செல்லவிருக்கிறார். ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

சீன வெளிவிவகார அமைச்சர் ஐரோப்பாவுக்கு அவசர விஜயம்

  • June 30, 2026
  • 0 Comments

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி Wang Yi, ஐரோப்பிய நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். ஜூலை 2 முதல் 8 ஆம்திகதிவரை திட்டமிடப்பட்டுள்ள இந்தச் சுற்றுப்பயணத்தில் அவர் டென்மார்க், ஸ்வீடன், பின்லாந்து மற்றும் நார்வே ஆகிய நாடுகளுக்கு வர இருக்கின்றார். இந்த பயணத்தின் போது, அந்தந்த நாடுகளின் வெளிவிவகாரஅமைச்சர்களைச் சந்தித்து அவர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். இந்த முக்கியத் தகவலைச் சீன வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அதிகாரப்பூர்வமாக இன்று (30) வெளியிட்டுள்ளார்.

சட்டவிரோதக் குடியேற்றத்தைக் குறைக்கவும், வரி செலுத்துவோரின் நிதிச் சுமையைச் சமன் செய்யவும் சுமார் £10,000 வரை வசூலிக்க இந்தத் திட்டம் மூலம் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

அகதிகளிடமிருந்து வசூலிப்பு: பிரித்தானியாவில் புதிய குடியேற்ற நிபந்தனை

  • June 30, 2026
  • 0 Comments

பிரித்தானியாவிற்குள் நுழையும் அகதிகள் அங்கு நிரந்தரமாகக் குடியேறுவதற்கான தகுதியைப் பெறுவதற்கு முன்னதாக, தங்குமிடம் மற்றும் அடிப்படைச் செலவுகளுக்காக அரசு செலுத்தும் நிதியை மீள திருப்பிச் செலுத்தக் கோரும் புதிய சட்டத் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. சட்டவிரோதக் குடியேற்றத்தைக் குறைக்கவும், வரி செலுத்துவோரின் நிதிச் சுமையைச் சமன் செய்யவும் சுமார் £10,000 வரை வசூலிக்க இந்தத் திட்டம் மூலம் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் கட்சி தலைமையிலான இந்த முயற்சி, நாட்டில் நிலவும் அரசியல் அழுத்தம் மற்றும் குடியேற்றம் தொடர்பான […]