கிவுல் ஓயாத திட்டத்தில் உள்நோக்கம் எதுவும் கிடையாது: அரசு விளக்கம்!
“கிவுல் ஓயா அபிவிருத்தி திட்டத்தை Kivul Oya project அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி வாக்குவேட்டை நடத்துவதற்கு சிலர் முற்படுகின்றனர். எனினும், அத்திட்டத்தில் எவ்வித உள்நோக்கமும் கிடையாது.” இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது கிவுல்ஓயா திட்டம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களில் விவசாயத்துக்குரிய நீர்பாசன […]













