இலங்கை

கிரகரி வாவி சுற்றுலா படகு சேவையை முறைமைப்படுத்த திட்டம்

  • April 20, 2026
  • 0 Comments

நுவரெலியா கிரகரி வாவியின் சுற்றுலா படகு சேவையை முறைமைப்படுத்தி முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என நுவரெலியா மாநகர முதல்வர் உபாலி வனிகசேகர தெரிவித்துள்ளார். நேற்று (19) சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் விபத்துக்குள்ளானதை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று, அதிவேகமாக வந்த மற்றொரு படகுடன் மோதி விபத்துக்குள்ளானதில், சுற்றுலாப் பயணிகள் பயணித்த படகு கிரகரி வாவியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. எவ்வாறாயினும், அங்கிருந்த […]

இலங்கை

மர்மமான முறையில் கிடந்த என்புக்கூடு!

  • April 15, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், வேலணை அல்லைப்பிட்டி பகுதியில் உள்ள பற்றைக் காணியில் இருந்து மனித என்புக் கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அல்லைப்பிட்டி பகுதியிலுள்ள பற்றைக் காணி ஒன்றில் என்புக் கூடுகள் இருப்பதாக காவல்துறை அவசர தொலைபேசி இலக்கத்துக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, குறித்த எலும்புக் கூடு மீட்கப்பட்டுள்ளது. இந்த என்புக் கூடு, சுமார் 4 முதல் 6 மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்த ஒருவரின் என்புக்கூடாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். எவ்வாறாயினும் உயிரிழந்தவர் தொடர்பில் […]

இந்தியா

பிரபல பாடகிக்கு மாரடைப்பு!

  • April 12, 2026
  • 0 Comments

இந்தியத் திரையிசையின் முன்னணி பாடகி ஆஷா போஸ்லே (Asha Bhosle), மாரடைப்பு மற்றும் நுரையீரல் தொடர்பான சிக்கல்கள் காரணமாக மும்பையில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 92 வயதாகும் அவர், ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக இந்திய இசைத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். காதல் பாடல்கள் முதல் முதல் பொப் இசை வரை அனைத்து வகைகளிலும் ஆஷா போஸ்லே சாதனை படைத்தவர். காலத்தால் அழியாத பாடல்களை […]

இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலையும் சடுதியாக அதிகரிப்பு

  • April 5, 2026
  • 0 Comments

இலங்கையில் இன்று (05) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லாஃப்ஸ் (LAUGFS) சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய LAUGFS சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 1070 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அதன் புதிய விலை 5,700 ரூபாயாகும் அதேநேரம் 5 கிலோ கிராம் நிறையுடைய LAUGFS சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 418 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 2,280 ரூபாயாகும்.

இலங்கை

யாழ். வடமராட்சியில் கரையொதுங்கிய சடலம்

  • March 31, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – வடமராட்சி அல்வாய் வடக்கு கோயில் தோட்டத்தை சேர்ந்த சின்னத்தம்பி குலசிங்கம் என்பவரது சடலம் இன்று (31) காலை பருத்தித்துறை வியாபாரி மூலை பகுதியில் கடலில் இருந்து கரை ஒதுங்கியுள்ளது. குறித்த நபரை நேற்றிலிருந்து காணவில்லை என உறவுகள் தேடிக்கொண்டிருந்த நிலையில் இன்று காலை அவரது சடலம் கரை ஒதுங்கியுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்றிருந்த பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் நேற்றிலிருந்து காணாமல்போன அல்வாய் வடக்கு கோயில் தோட்டத்தை சேர்ந்த சின்னத்தம்பி குலசிங்கம் என்பவரது சடலம் என அடையாளம் காட்டப்பட்டுள்ளது. மேலதிக […]

இலங்கை

கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

  • March 30, 2026
  • 0 Comments

போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில், நீர்கொழும்பு பகுதியில் இன்று (30) பிற்பகல் கார் ஒன்றின் மீது பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டுடன் அந்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், இந்தச் சம்பவத்தின் போது பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரி ஒருவரும் காயமடைந்துள்ளார். இதேவேளை, காரில் இருந்த இருவர் 500 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை

கமல் அமரசிங்க மீண்டும் விளக்கமறியலில்

  • March 30, 2026
  • 0 Comments

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க, ஏப்ரல் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் அவர் இன்று (30) ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இலங்கை முக்கிய செய்திகள்

NPP நாடாளுமன்ற உறுப்பினர் சென்ற கார் விபத்து

  • March 30, 2026
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசால் பயணித்த கார், நேற்று இரவு (29) சிலாபம் பண்டாரவத்தை வளைவில் வீதியை விட்டு விலகி மதில் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. அந்த நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மாத்திரமே காரில் இருந்துள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினருக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இந்த விபத்தினால் கார் மற்றும் மதிலுக்குப் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகப் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு

  • March 29, 2026
  • 0 Comments

இலங்கையில் நடைமுறையிலுள்ள அவசரகால நிலையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியாகியுள்ள இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின்படி, பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 2ஆம் பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இந்த நீடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவசரகால அதிகாரங்கள் எக்காரணம் கொண்டும் பொதுமக்களின் சிவில் உரிமைகளை மீறும் வகையில் பயன்படுத்தப்பட மாட்டாது என ஜனாதிபதி […]

இலங்கை செய்தி

இலங்கை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு பிணை

  • March 27, 2026
  • 0 Comments

இலங்கை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, அவரைப் பிணையில் செல்ல நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டுள்ளது. தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.