புகலிடம் கோருபவர்களை ஒட்டுமொத்தமாக திருப்பியனுப்ப யோசனை – கிரீஸின் சர்ச்சைக்குரிய முன்மொழிவு
சட்டவிரோத குடியேறிகளின் பெருமளவிலான வருகையின்போது, ஐரோப்பிய ஒன்றியத்தில் தஞ்சம் கோருவதற்கான உரிமையை இடைநிறுத்தம் செய்ய வேண்டும் என கிரேக்க குடியேற்றம் மற்றும் தஞ்சம் கோரும் அமைச்சர் தானோஸ் பிளெவ்ரிஸ் Thanos Plevris முன்மொழிந்துள்ளார். இந்த சர்ச்சைக்குரிய நடவடிக்கை, ஐரோப்பிய ஒன்றியத்தின் குடியேற்றக் கொள்கையில் ஒரு பெரிய மாற்றத்தைக் ஏற்படுத்தும். அத்துடன் குடியேறிகளின் தஞ்சம் கோரும் கோரிக்கைகளைத் தனித்தனியாக மதிப்பீடு செய்யாமலேயே அவர்களைத் திருப்பி அனுப்ப அனுமதிக்கும். இதன் விளைவாக, தற்போதைய ஐரோப்பிய ஒன்றியச் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ள “கூட்டுத் […]








