இந்தியாவை உலுக்கிய ஆர்னாப் புயல் – 05 பேர் உயிரிழப்பு
வங்காள விரிகுடாவில் உருவாகி இந்தியாவை நோக்கி நகர்ந்துள்ள ‘ஆர்னாப்’ புயலின் தாக்கத்தால் 5 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இன்று (28) அதிகாலை ஆந்திரப் பிரதேச கடற்கரைக்கு நுழைந்த இந்தபுயல் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 06 மணிநேரம் இதன் தாக்கம் நீடித்ததாக கூறப்படுகிறது. பலத்த காற்று காரணமாக மரங்கள் முறிந்து விழுந்தத்தில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.



