செய்தி

டயப்பருடன் வீட்டை விட்டு வெளியேறிய குழந்தை – அரிசோனா பாலைவனத்தில் மீட்பு

  • November 20, 2026
  • 0 Comments

அரிசோனா பாலைவனத்தில் இரண்டுவயது குழந்தையொன்று மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் எலோயில் உள்ள தனது வீட்டில் இருந்து டயப்பருடன் வெளியேறிய குறித்த  குழந்தை 07 மணிநேர தீவிர தேடுதல் நடவடிக்கையின் பின் அரிசோனா பாலைவனத்தில் மீட்கப்பட்டுள்ளது. குழந்தையை கண்டுப்பிடிப்பதற்காக பினால் கவுண்டி ஷெரிப் அலுவலகம் ட்ரோன்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் 75 பேர் கொண்ட குழுவை களமிறக்கியதாக தெரிவித்துள்ளது. குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.