ரஷ்யா குறித்த ஆக்ரோஷமான அறிக்கைகள் பாதுகாப்பை சீர்குலைக்கும் – அமெரிக்கா எச்சரிக்கை
ரஷ்யாவால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்த தங்களது பகிரங்கப் பேச்சுகளை மென்மையாக்குமாறு, லிதுவேனியா, லாட்வியா மற்றும் எஸ்டோனியா உள்ளிட்ட பல நேட்டோ நட்பு நாடுகளை பென்டகன் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பியத் தலைவர்களின் ஆக்ரோஷமான அறிக்கைகள் கண்டத்தின் பாதுகாப்பைக் குலைத்து, பதட்டங்களை அதிகரிக்கக்கூடும் என்று அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். உக்ரைனில் போரை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை ட்ரம்ப் நிர்வாகம் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், இந்தக் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.



