ஆஸ்ரேலியா, ஜப்பானுக்கிடையில் பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்து!
மேற்காசியாவில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்படும் பொருளாதாரப் பாதிப்புகளைச் சமாளிக்க ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையில் புதிய பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
குறித்த ஒப்பந்தத்தின் பிரகாரம் எரிசக்தி, உணவு பாதுகாப்பு மற்றும் முக்கியமான தாதுக்களின் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்த இரு நாடுகளின் தலைவர்களும் திட்டமிட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் பிரதமர் Takaichi Sanae இன்று பிரதமர் Anthony Albanese ஐ சந்தித்து பேச்சு நடத்தினார். இதனையடுத்தே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
குறிப்பாக, எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்க்கவும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இரு நாட்டுப் பிரதமர்களும் உறுதியளித்துள்ளனர்.





