பொழுதுபோக்கு

ஆரம்பித்த சில வாரங்களிலேயே ஆல்யா மானசா சீரியல் படைத்துள்ள சாதனை

சன் டிவியின் சீரியல்கள் டிஆர்பியின் முன்னணியில் உள்ளன. அந்த வரிசையில் கயல் சீரியல் முதலிடத்தில் உள்ளது. சமீபத்தில் துவங்கியுள்ள சன் டிவியின் புத்தம்புதிய தொடரான இனியா, தற்போது டிஆர்பியில் முன்னணியில் காணப்படுகிறது.

பொதுவாகவே ஒவ்வொரு சேனலிலும் நிகழ்ச்சிகளுக்கு இணையான வரவேற்பை சீரியல்கள் பெற்று வருகின்றன. அந்த வகையில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் என சேனல்களுக்குள் அதிகமான போட்டி நிலவி வருகிறது.

இந்த சேனல்களில் ஒளிபரப்பாகிவரும் தொடர்கள் தொடர்ந்து ரசிகர்களை அதிகமாக கவர்ந்து டிஆர்பியிலும் சிறப்பான இடங்களை பெற்று வருகின்றன. அந்த வகையில், சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் கயல், இனியா, சுந்தரி உள்ளிட்ட தொடர்களுக்குள் பலத்த போட்டி காணப்படுகிறது.

சன் டிவியில் கயல் தொடர் சீரியல்களின் டிஆர்பியில் முதன்மையான இடத்தை தொடர்ந்து பிடித்து வருகிறது.

இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு சன் டிவியில் துவங்கிய இனியா தொடர், தற்போது 150 எபிசோட்களை நெருங்கவுள்ளது. விஜய் டிவியில் தொடர்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்துவந்த ஆல்யா மானசா, தற்போது இனியா தொடர் மூலம் ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளார். இந்தத் தொடர் தற்போது இந்த ஆண்டின் 20வது வாரத்தை எட்டியுள்ளது. மற்ற சன் டிவி தொடர்களை பின்னுக்கு தள்ளி தற்போது இரண்டாவது இடத்தை இனியா பிடித்துள்ளது.

கயல் தொடர் சன் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் உள்ள நிலையில், இனியா 9.16 டிவிஆருடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. முதலிடத்தில் உள்ள கயல் 10.24 புள்ளிகள் பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தில் சன் டிவியின் வானத்தைப் போல தொடரும், நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் எதிர்நீச்சல் மற்றும் சுந்தரி தொடர்களும் இடம் பிடித்துள்ளன.

(Visited 3 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content