ஐரோப்பா செய்தி

மோதலை தணிப்பதே சிறந்த தீர்வு – பிரித்தானிய பிரதமர் வலியுறுத்தல்

மக்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கைச் செலவு சுமையிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

ஈரானில் போர் நீடித்தால் பொருளாதார தாக்கங்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு அரசாங்கம் எந்தளவுக்கு உதவிகளை வழங்கும் என பிபிசியின் அரசியல் ஆய்வாளர் கிறிஸ் மேசன் (Chris Mason) எழுப்பிய கேள்விக்கே பிரதமர் இவ்வாறு பதிலளித்தார்.

மக்களை கருத்திற்கொண்டே எரிசக்தி கட்டண வரம்பு போன்ற நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் பிரமர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் மூன்று முதல் ஆறு மாதங்களில் நிலைமை எவ்வாறு இருக்கும் என்பதை துல்லியமாக கணிக்க முடியாது என சுட்டிக்காட்டிய பிரமர்
எதிர்காலம் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்றும் கூறினார்.

மேலும் போரின் தீவிரத்தை குறைத்து மோதலைத் தணிப்பதே வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை சமாளிக்க மிகவும் எளியதும் பயனுள்ளதுமான வழி என பிரதமர் ஸ்டார்மர் வலியுறுத்தினார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி