ஐரோப்பா செய்தி

ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் – நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்திட்டத்தை உருவாக்கும் பிரித்தானியா

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான உரிய திட்டத்தை செயல்படுத்த பிரித்தானியா தனது நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக பிரதமர் ஸ்டார்மர் (Starmer) தெரிவித்துள்ளார்.

டவுனிங்கில் இன்று ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் நடவடிக்கைகள் ஈரானில் உள்ள “வெறுக்கத்தக்க ஆட்சியின்” இராணுவத் திறனை பெருமளவு பலவீனப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும், மோதலுக்குப் பிறகு ஈரானின் அணுசக்தி திட்டத்தை மீண்டும் கட்டியெழுப்பும் திறனை கட்டுப்படுத்தவும், சர்வதேச கப்பல் போக்குவரத்தை பாதுகாக்கவும் பேச்சுவார்த்தை அடிப்படையிலான ஒப்பந்தம் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், உலக சந்தைகளில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது மிகவும் முக்கியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இது எளிதான பணியல்ல என கூறிய பிரதமர் ஸ்டார்மர் பிராந்தியத்தில் சுதந்திரத்தை மீட்டெடுக்க பிரித்தானியா தனது அனைத்து நட்பு நாடுகளுடனும் இணைந்து செயல்திட்டமொன்றை உருவாக்கி வருவதாகவும் கூறினார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி