ஐரோப்பா

ஸ்டாமர் பதவி விலகலை அறிவிக்க வேண்டும் – வெஸ் ஸ்ட்ரீட்டிங் வலியுறுத்தல்

பிரித்தானியாவின் இடைத்தேர்தலில் தொழிலாளர் கட்சி பாரிய தோல்வியடைந்துள்ள நிலையில் பதவி விலகல் தொடர்பில் பிரதமர் ஸ்டாமர் அறிவிக்க வேண்டும் என வெஸ் ஸ்ட்ரீட்டிங் (Wes Streeting)  வலியுறுத்தியுள்ளார்.

வரும் வெள்ளிக்கிழமைக்கு முன் அவர் தனது இராஜினாமா தொடர்பான முடிவை அறிவிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், தொழிற்கட்சியில்  தலைமைப் போட்டி நடைபெறும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றும் வாக்குச்சீட்டில் இடம்பெறுவதற்குத் தேவையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகவும்  கூறியுள்ளார்.

இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாம் வெற்றி பெற்று, நாடாளுமன்றத்திற்குத் திரும்பி, தொழிற்கட்சித் தலைவருக்கு சவால் விடுவார் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையே G7 மாநாட்டில் பேசிய ஸ்டாமர் தனது போட்டியாளர்கள் சொல்வது தவறு என்பதை நிரூபிப்பேன் என்றும், மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான தனது ஆணையைத் தொடர்வேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்