உலகம்

கனடாவில் இலங்கை மருத்துவரின் மோசமான செயல் – பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கைது

கனடாவின் டொராண்டோவில் உள்ள முன்னணி ‘குழந்தைகளுக்கான மருத்துவமனையில்’ பணிபுரிந்த, இலங்கையில் பிறந்த மருத்துவர் ஒருவர், இணையத்தில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் வன்முறை தொடர்பான படங்கள் மற்றும் தகவல்களைப் பார்த்த மற்றும் வைத்திருந்த குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர், திஸ்ஸநாயக்க என்ற 44 வயதுடையவராவார்.

டொராண்டோ காவல்துறையின் இணையவழி குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை விசாரணைப் பிரிவு நடத்திய விசாரணையைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த விசாரணை 2026 ஜனவரியில் தொடங்கப்பட்டதாக கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்த.

பின்னர் பிப்ரவரியில், சம்பந்தப்பட்ட மருத்துவமனை மற்றும் சந்தேக நபரின் தனிப்பட்ட வீட்டில் சோதனை நடத்தப்பட் நிலையில், அங்கிருந்து  கணினி உட்பட பல மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சாட்சிகளின் அடிப்படையில் சந்தேகநபர் ஒன்ராறியோ உயர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இருப்பினும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும்   விசாரணைகள் தொடர்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகள் சந்தேகிக்கப்படும் மருத்துவரின் தொழில்சார் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவை என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் கண்டறியப்படவில்லை என்று டொராண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்ட குழந்தைகள் மருத்துவமனை, இந்தச் சம்பவத்தால் தாங்கள் மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்ததாகத் தெரிவித்துள்ளது.

மேலும், சம்பந்தப்பட்ட விசாரணைகள் குறித்து அறிந்தவுடன், டாக்டர் திசநாயக்கவின் சேவைகள் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும், இந்த முடிவு நோயாளிகளுக்கோ அல்லது அவர்களது குடும்பத்தினருக்கோ ஏதேனும் ஆபத்தை விளைவிக்கும் என்பதற்கு தங்களுக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்