இலங்கை

இலங்கை – மர்மமான முறையில் உயிரிழந்த ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

லுணுகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பீஸ்ஸ கெசல்வத்த பகுதியில் உள்ள கும்புக்கன் ஓயாவில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

லுணுகலை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு நேற்று (05) கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஹோப்டன், லுணுகலை பிரதேசத்தில் வசிக்கும் 65 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கடந்த 3ஆம் திகதி காலை லுணுகலை நகருக்குச் சென்றுவிட்டு இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.இதனையடுத்து உறவினர்கள் நேற்று லுணுகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பின்னர் கும்புக்கன் ஓயாவில் இருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 3 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content