தென் அமெரிக்கா

ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஈக்வடார் அழகியை சுட்டு கொலை செய்த மர்ம நபர்கள்!

ஈக்வடார் நாட்டை சேர்ந்தவர் லாண்டி பராகா கோய்புரோ (23).இவர் 2022-ம் ஆண்டு மிஸ் குவடார் அழகி போட்டியில் பங்கேற்றவர்.

இதற்கிடையே லாண்டி பராகா ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது தான் சாப்பிடும் ஆக்டோபஸ் செவிச் உணவு பற்றியும், தனது இருப்பிடம் பற்றியும் இன்ஸ்டாகிராமில் பதிவாக வெளியிட்டார்.

சிறிது நேரத்திற்கு பிறகு அந்த ஹோட்டலுக்கு 2 வாலிபர்கள் துப்பாக்கியுடன் வந்தனர். இதில் ஒருவர் வாசலிலேயே நின்று கொள்ள, மற்றொருவர் லாண்டி பராகா மற்றும் அவருடன் பேசி கொண்டிருந்த நபர் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டார்.

பின்னர் 2 மர்ம நபர்களும் அங்கிருந்து தப்பி சென்றனர். உடலில் 3 முறை குண்டு பாய்ந்ததில் லாண்டி பராகா உயிரிழந்தார். லாண்டி பராகாவுக்கும், போதை பொருள் கும்பல் தலைவன் லியாண்டிரோ நாரிரோ என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஈக்வடார் அழகி சுட்டுக்கொலை- மர்ம நபர்கள் தாக்குதல்

ஒரு ஆண்டுக்கு முன் சிறையில் நடந்த கலவரத்தில் லியாண்டிரோ நாரிரோ பலியாகிவிட்டார். இதற்கிடையே ஊழல் தொடர்புடைய விசாரணை ஒன்றில் அழகி லாண்டி பராகா பெயரும் இடம்பெற்று இருந்தது.

லாண்டி பராகாவுடனான தொடர்பு குறித்து தனது மனைவிக்கு தெரியக் கூடாது என்று கடத்தல்காரர் லியாண்டிரோ நாரிரோ நினைத்ததாகவும், தனது கணக்காளரிடம் தொலை பேசியில் பேசும்போது , லாண்டி பராகாவுடனான தொடர்பு குறித்து எனது மனைவிக்கு தெரிந்து விட்டால் பிரச்சினை ஆகி விடும் என்று அவர் கூறி பயந்ததாகவும் நீதிமன்ற விசாரணையின் பொது தெரிவிக்கப்பட்டது.

இதனால் அழகி லாண்டி பராகா கொலையில் லியாண்டிரோ நாரிரோவின் மனைவிக்கு தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

(Visited 3 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

தமிழ்நாடு தென் அமெரிக்கா

3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் சார்ந்த துறைகளில் கடல் போல வாய்ப்புகள்

மாயா அகாடமி ஆஃப் அட்வான்ஸ்டு சினிமாட்டிக்ஸ் எனும் மாக்  (MAAC) கோவையில்  நவீன 3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் குறித்து இளம் தலைமுறை மாணவ,மாணவிகளுக்குபயிற்சி அளித்து
தென் அமெரிக்கா

அவள் என் காதலி.. 800 வருடங்கள் பழமையான மம்மியோடு பொலிஸில் சிக்கிய 26 வயது இளைஞன்!

பெரு நாட்டில் 800 வருடப் பழமையான மம்மியை உணவு வழங்கப்பயன்படும் பையில் வைத்து, எடுத்துச் செல்லும் போது காவல்துறையிடம் நபர் ஒருவர் சிக்கியுள்ளார். பெரு நாட்டை சேர்ந்த

You cannot copy content of this page

Skip to content