உடல்நலக்குறைவால் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தி!
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லேசான காய்ச்சல் அறிகுறி காரணமாக அவர் டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் சோனியா காந்தி இருப்பதாகவும் அவரது உடல் நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
(Visited 7 times, 1 visits today)