உலகம் செய்தி

சோமாலிலாந்தில் இஸ்ரேல் ராணுவத் தளம்?

சோமாலிலாந்து ஜனாதிபதி இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டபோது, இஸ்ரேல் பிரதமரை சந்தித்து பேச்சு நடத்தியவேளை

தங்கள் நாட்டில் இஸ்ரேல் ராணுவத் தளம் அமைக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக வெளியான செய்திகளை சோமாலிலாந்தின் Somaliland பாதுகாப்பு அமைச்சரான Mohamed Yusef Ali முற்றாக நிராகரித்துள்ளார்.

எனினும், இஸ்ரேல் தற்போது சோமாலிலாந்தின் ராணுவம் மற்றும் காவல்துறைக்கு பயிற்சி அளித்து வருவதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

சோமாலியாவில் இருந்து பிரிந்த சோமாலிலாந்தை , தனி நாடாக அங்கீகரித்த முதல் நாடாக இஸ்ரேல் விளங்குகின்றது.

இதனையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே தூதரக உறவுகள் பலமடைந்துள்ளன.

சோமாலிலாந்தின் ஜனாதிபதி இஸ்ரேலுக்குச் சென்று Jerusalemமில் ஒரு தூதரகத்தைத் திறந்துள்ள நிலையில், இந்த நெருக்கம் சோமாலியாவின் கடும் எதிர்ப்பைச் சம்பாதித்துள்ளது.

இந்த அரசியல் நகர்வுகள் ஆபிரிக்க பிராந்தியத்தின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பில் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி