உலகம் செய்தி

அவசரப்பட்டுவிட்டார் ட்ரம்ப் – இஸ்ரேல் தூதுவர் சீற்றம்

Israel’s Ambassador to the United Nations Danny Danon

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான புதிய ஒப்பந்தம் தொடர்பில் ஐ.நாவுக்கான இஸ்ரேல் தூதுவர் Danny Danon , தனது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

இந்த உடன்படிக்கையானது இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளின் பாதுகாப்பிற்கு பெரிய அச்சுறுத்தலாக அமையும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

பேச்சுவார்த்தைகளை விரைவாக முடிக்க முயன்றதன் மூலம் அமெரிக்க ஜனாதிபதி ஈரானுக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக Danny Danon விமர்சித்துள்ளார்.

இருப்பினும், இது ஒரு தொடக்கநிலை கட்டமைப்பு மட்டுமே என்பதால் இறுதி முடிவு எடுக்கும் வரை பொறுத்திருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது நாட்டின் பாதுகாப்பு நலன்களைக் கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தை இஸ்ரேல் மிகவும் எச்சரிக்கையுடன் அணுகுகிறது என்பதை தூதுவரின் கருத்து வெளிப்படுத்துகின்றது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி