தற்செயலாக பாகிஸ்தான் வான்வெளியில் நுழைந்த இந்திய விமானம் – விமானி பணிநீக்கம்
தலைநகர் டெல்லியிலிருந்து வடக்கு நகரமான அமிர்தசரஸுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் சிறிது நேரம் பாகிஸ்தான் வான்வெளியில் நுழைந்ததைத் தொடர்ந்து, விமானி ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தின்போது அந்த விமானி ஏர்பஸ் ஏ321 ரக விமானத்தை இயக்கியுள்ளார். விமானம் அமிர்தசரஸை நெருங்கிக் கொண்டிருந்தபோது, பறவை மோதல் குறித்த முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து விமானத்தை நிறுத்தி வைக்குமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான டி.ஜி.சி.ஏ. (DGCA) தெரிவித்துள்ளது. அறிவுறுத்தலுக்கு அமைய விமானம் தரையிறங்கியபோது […]



