செய்தி விளையாட்டு

SLvsZIM – இரண்டாவது T20 போட்டியில் இலங்கை அணி தோல்வி

இலங்கை அணிக்கு எதிரான 2வது இருபதுக்கு 20 போட்டியில் சிம்பாப்வே அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

சுற்றுலா இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2வது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெற்றது

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சிம்பாப்வே அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

போட்டியில் முதலாவதாக துடுப்பாடிய இலங்கை அணி 17.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 80 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் கமில் மிசார 20 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.

இதன்படி சிம்பாப்வே அணிக்கு 81 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அதற்கமைய குறித்த வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய சிம்பாப்வே அணி 14.2 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து போட்டியில் வெற்றி பெற்றது

இதன்படி இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில் 1 – 1 என்ற அடிப்படையில் சமநிலை வகிக்கின்றன

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி