மோசமான வானிலை -13 பாடசாலைகள் மூடல்
நிலவும் மோசமான வானிலை காரணமாக, நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலயங்களுக்கு உட்பட்ட 13 பாடசாலைகள் இன்றைய தினம் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா கல்வி வலயத்திலுள்ள 156 பாடசாலைகளில் நான்கும், ஹட்டன் கல்வி வலயத்திலுள்ள 150 பாடசாலைகளில் ஒன்பதும் மூடப்பட்டுள்ளதாக வளையக் கல்வி பணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். நிலவும் மோசமான வானிலைச் சூழலில், பாடசாலைகளை நடத்துவதா இல்லையா என்பது குறித்த முடிவை எடுக்கும் அதிகாரம், வலயக் கல்விப் பணிப்பாளர்களால் அந்தந்தப் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. அதற்கிணங்க, குறித்த 13 […]




