அறிந்திருக்க வேண்டியவை

எவரெஸ்ட்டை விட 100 மடங்கு பெரிய 2 சிகரம் கண்டுபிடிப்பு – விஞ்ஞானிகள் தகவல்

உலகின் மிக உயரமான சிகரமாக கருதப்படும் எவரெஸ்ட்டை விட 100 மடங்கு பெரிய 2 சிகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே மிக உயரமான சிகரமாக எவரெஸ்ட் இருந்து வருகின்ற நிலையில் எவரெஸ்ட் சிகரம் உலகின் மிக உயரமான சிகரம் அல்ல என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஏனெனில் எவரெஸ்ட் சிகரத்தை விட 100 மடங்கு உயரத்தில் இரண்டு மலைகள் உள்ளன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வின்படி, ஆப்பிரிக்கா மற்றும் பசிபிக் பெருங்கடலின் கீழ் பூமியின் மையப்பகுதிக்கும், பூமியின் மேற்பரப்புக்குக் கீழே அமைந்துள்ள கடினமான பகுதிக்கும் இடையில் 2 மாபெரும் மலைகள் அமைந்துள்ளன என்று நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்த கட்டுரையில், பூமியின் மிகப்பெரிய மற்றும் மிக உயரமான மலைகள் ஆப்பிரிக்கா மற்றும் பசிபிக் பெருங்கடலின் எல்லையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை எவரெஸ்ட் சிகரத்தை விட 100 மடங்கு உயரமானது. இந்த இரண்டு சிகரங்களும் பூமியின் மேற்பரப்புக்கு கீழே ஆழமாக அமைந்துள்ளன.

சுமார் 1,000 கிலோமீட்டர் உயரத்தைக் கொண்டுள்ளன. இவை எவரெஸ்ட் சிகரத்தின் 8.8 கிலோமீட்டர் உயரத்தை விட மிக அதிகம். இந்த மலைகள் குறைந்தது அரை பில்லியன் ஆண்டுகள் பழமையானவை. இந்த இரு மலைகளின் வரலாறானது, பூமி உருவாகும் முன்பாக 4 பில்லியன் ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.

(Visited 86 times, 2 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அறிந்திருக்க வேண்டியவை

பூமியின் உள் மையத்தின் ரகசியம் அம்பலம்!

பூமியின் உட்புறத்தில் என்ன இருக்கிறது என்ற கேள்விகளுக்கான விடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான வளர்ச்சி ஏற்படும்போது மேலும் ஆழமாகவும், விரிவாகவும் கேட்கபடுகிறது. கேள்விகள் கேட்பதும் அதற்கான பதிலை தேடுவதும்
அறிந்திருக்க வேண்டியவை

ChatGPTக்குப் போட்டியாக Google எடுத்த அதிரடி நடவடிக்கை

Google நிறுவனம் ChatGPTக்குப் போட்டியாக புதிய செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வாயிலாகச் செயல்படும் கலந்துரையாடல் செயலியை Google அறிமுகம் செய்யவுள்ளது.