ஈரானின் ஆதரவு குழுக்கள் மீது தாக்குதல் – அமெரிக்காவுக்கு கைக்கொடுத்த சவுதி அரேபியா
ஈராக்கில் ஈரான் ஆதரவு குழுக்களுக்கு எதிராக சவுதி அரேபியாவுடன் இணைந்து அமெரிக்கா இன்று நடத்திய தாக்குதலில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கப் படைகள் மீது ஈரான் பால்ஸ்டிக் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியதுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் ஜலசந்தி மீதான மோதலைத் தீர்க்கும் நோக்கில் ஓமான் ஒரு புதிய பிராந்திய ஒப்பந்தத்தை முன்மொழிந்த வேளையில் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.




