ஏமனில் தீவிரமடையும் மோதலால் உள்நாட்டிலேயே இடம்பெயரும் மக்கள்
ஏமனில் மீண்டும் தீவிரமடைந்துள்ள மோதல்களால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோர் கடல் வழியாக ஜிபூட்டிக்குத் தப்பிச் சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஐ.நாவின் அகதிகள் முகமை இன்று வெளியிட்ட அறிவிப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. “மனிதாபிமான உதவிகளைச் சென்றடையச் செய்வது ஒரு பெரும் சவாலாகவே உள்ளது. பாதுகாப்பற்ற சூழல், சேதமடைந்த சாலைகள், தொலைத்தொடர்புத் தடைகள் மற்றும் நடமாட்டக் கட்டுப்பாடுகள் ஆகியவை நிவாரணப் பணிகளைப் பாதிக்கின்றன” என்று ஐ.நா. அகதிகள் […]




