பொழுதுபோக்கு

படப்பிடிப்பு தளத்தில் திடீரென மயங்கி விழுந்த சமந்தா!

‘சிட்டாடல்’ படப்பிடிப்பின் போது நடிகை சமந்தா திடீரென மயங்கி விழுந்திருக்கிறார். மையோசிடிஸ் நோயால் அவதிப்பட்டு வரும் நடிகை சமந்தா, தான் திடீரென மயங்கி விழுந்த தகவலை தனது பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார்.

நடிகை சமந்தா மையோசிடிஸ் நோயால் பல வருடங்களாக அவதிப்பட்டு வரும் நிலையில், இதற்காக சிகிச்சை எடுப்பதற்காக கடந்த ஆறேழு மாதங்களாக சினிமாவில் இருந்து விலகி இருந்தார். அந்த நேரத்தில், தனது உடல்நலன் தொடர்பாக பாட்காஸ்ட் ஒன்றை ஆரம்பித்து தனது நண்பரும் ஊட்டச்சத்து நிபுணருமான அல்கேஷுடன் தொடர்ந்து உரையாடி வருகிறார்.

Samantha Ruth Prabhu REACTS to 'South VS North films' debate, says 'I can  work in films...' – India TV

இந்த வாரத்தில் வெளியாகியுள்ள அந்தத் தொடரில் பேசிய நடிகை சமந்தா, “ ‘குஷி’ படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்து ‘சிட்டாடல்’ தொடரில் நடிக்க வேண்டி இருந்தது. இதில் ஆக்‌ஷன் அதிகம் என்பதால் எனக்கு உடல் ரீதியாக சிரமமாக இருந்தது. கடும் வலியால் அவதிப்பட்டு, ஒரு கட்டத்தில் படப்பிடிப்பில் மயங்கி விழுந்தேன். இதன் பின்னர் படக்குழுவினர் என்னை மருத்துவமனையில் அனுமதித்தனர். இருந்தாலும் ஒருவழியாக ஆக்‌ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறேன் என நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

Samantha Ruth Prabhu HD Wallpapers - FinetoShine

மையோசிடிஸ் நோய்க்காக சிகிச்சையில் இருந்தபோதே சமந்தா இந்தத் தொடரில் நடித்தார். தனது உடல்நிலை மோசமாக இருக்கிறது என்று தெரிந்தும் எந்தவிதமான டூப்பும் இல்லாமல் ஆக்‌ஷன் காட்சிகளில் அவரே நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சீக்கிரம் சினிமாவில் கம்பேக் கொடுக்கவுள்ள சமந்தா, இனி வலுவான கதாபாத்திரத்தில் தான் நடிப்பேன் எனவும் தனது ரசிகர்களுக்கு உறுதியளித்துள்ளார்.

(Visited 6 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content