இந்தியா செய்தி

முக்கிய மாநாட்டை நடத்தும் இந்தியா: புருவத்தை உயர்த்துகிறது சீனா

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளை உள்ளடக்கிய குவாட் (QUAD) கூட்டமைப்பில், ஆக்கபூர்வமான மற்றும் நம்பகமான பங்களிப்பைத் தொடர்ந்து வழங்குவதில் இந்தியா உறுதியாக இருப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளை உள்ளடக்கிய குவாட் (QUAD) கூட்டமைப்பில், ஆக்கபூர்வமான மற்றும் நம்பகமான பங்களிப்பைத் தொடர்ந்து வழங்குவதில் இந்தியா உறுதியாக இருப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் நடைபெற்ற நான்கு நாடுகளின் தலைவர்கள் சந்திப்பைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவு அமைச்சு செவ்வாய்க்கிழமை (17) வெளியிட்ட அறிவிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, குவாட் கூட்டமைப்பில் இந்தியாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை மோடி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பையில் 2027ஆம் ஆண்டு முதலாவது குவாட் வர்த்தகத் தலைவர்கள் மன்றம் (Quad Business Leaders Forum) நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இந்தியப் பெருங்கடல் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பு, பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதில் குவாட் கூட்டமைப்பு முக்கியப் பங்கு வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி குவாட் கூட்டணியானது, தமக்கு எதிரான கூட்டணியாகவும், இந்தோ, பசிபிக் பிராந்தியத்தில் தமது ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகவும் சீனா கருதுகின்றது. இந்நிலையில் இந்தியாவில் அடுத்த மாநாடு நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், சீனா அது தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி