இத்தாலிய பாடசாலைகளில் கடுமையாகும் சட்டங்கள் – ஆடைகளுக்கும் கட்டுப்பாடு
இத்தாலியப் பாடசாலைகளில் முகத்தை மறைக்கும் ஆடைகளை தடை செய்யவும், வகுப்பில் அனுமதிக்கப்படும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட பிரதமர் ஜார்ஜியா மெலோனி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதற்கமைய வகுப்பில் அனுமதிக்கப்படும் வெளிநாட்டு மாணவர்களின் அதிகபட்ச எண்ணிக்கையைச் சட்டப்பூர்வமாக நிர்ணயிப்பதற்கான நடவடிக்கை விரைவில் அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், படசாலைச் சூழலுடன் ஒன்றிணைவதில் கடுமையான சிரமங்களை எதிர்கொள்ளும் வெளிநாட்டு மாணவர்களின் பெற்றோர்கள் இத்தாலிய […]



