ஐரோப்பா

ஜெர்மனியில் கொள்ளை முயற்சி : வங்கி ஊழியர்கள் பணயக்கைதிகளாக பிடிப்பட்டனர்!

  • May 8, 2026
  • 0 Comments

ஜெர்மனியின் சின்சிக் நகரில் உள்ள ஒரு வங்கியில் பலரை பணயக்கைதிகளாக பிடித்துவைத்துக்கொண்டு பணம் பறிக்கும் சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டவர்களில், பணத்தை கொண்டுசெல்லும் வாகன ஓட்டுநர் மற்றும் ஒரு வங்கி ஊழியர் ஆகியோரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் ஏந்திய சந்தேகநபர்கள் வங்கிக்கு வெளியே ஒரு ஊழியரை மிரட்டிய பின்னர், அவரை  வலுக்கட்டாயமாக உள்ளே அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த சிறப்புப் படைகள் நிலைமையைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை செய்தி

திறைசேரி டொலர் கொள்ளை சம்பவம் – நிதியமைச்சின் அதிகாரி தற்கொலை

  • April 30, 2026
  • 0 Comments

திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் மாயமான சம்பவம் தொடர்பில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிதியமைச்சின் 04 அதிகாரிகளில் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். வௌிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவி பணிப்பாளராக செயற்பட்ட ஒருவரே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் குளியாப்பிட்டியவில் உள்ள தமது வீட்டின் காணியொன்றில் இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் இணையக் குற்றவாளிகளால் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில், இவருடன் சேர்த்து நான்கு அதிகாரிகளைப் பணி இடைநீக்கம் […]