இலங்கை

திருகோணமலை கோட்பே துறைமுகத்தை நவீன மயமாக்கல் திட்டம்

  • August 3, 2026
  • 0 Comments

திருகோணமலை கோட்பே மீன்பிடித் துறைமுகத்தை நவீனமயமாக்கி மேம்படுத்தும் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று (03) கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. உலக வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்கான விரிவான வரைபடங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றன. பணிகள் நிறைவடைந்தவுடன், அவை அமைச்சரவையின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்கப்படும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் 2027-ஆம் ஆண்டில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை

மூதுரில் சோகம் – பிரான்ஸ் செல்ல இருந்த இளைஞர் விபத்தில் சிக்கி மரணம்

  • August 3, 2026
  • 0 Comments

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோப்பூர் – ஜின்னாநகர் (59ஆம் கட்டை) பகுதியில் இன்று நேற்று மாலை (02) இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் ரிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் மூதூர் – கிளிவெட்டி பகுதியைச் சேர்ந்த தமிழ் செல்வன் தனேஸ் (வயது21) மற்றும் அருணவன் செல்வரெத்தினம் (வயது ) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இவர்களில் ஒருவர் […]

இலங்கை

திருகோணமலையில் சோகம் – யானை தாக்கியதில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் பலி

  • August 2, 2026
  • 0 Comments

திருகோணமலை- சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோமபுர பகுதியில் யானையின் தாக்குதலினால் படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் சிகிச்சை பலனின்றி இன்று (02) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். சேருநுவர-சோமபுர பகுதியிலுள்ள வன ஜீவராசிகள் திணைக்களத்துடன் இணைந்து கடமையாற்றும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கடந்த 30 ஆம் திகதி யானை மின் வேலி பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தபோது யானையின் தாக்குதலினால் படுகாயம் அடைந்தார். இதனை அடுத்து இவர் திருகோணமலை […]

இலங்கை

திருகோணமலையில் காட்டுத்தீ பரவல்

  • August 2, 2026
  • 0 Comments

திருகோணமலை மொரவெவ நீதிமன்ற வளாகத்துக்கு பின்னால் உள்ள காட்டுப் பகுதிக்குள் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இன்று (02) காலை இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளதாகவும் இராணுவத்தினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் தீ பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது. ஆனாலும் குறித்த பகுதிக்குள் மக்களின் நடமாட்டம் குறைவாக காணப்படுகின்ற போதிலும் தீ பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் தொடரில் விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை

திருகோணமலை- ஸ்ரீபுர பொலிஸ் நிலையம் உத்தியோகப்பூர்வமாக திறப்பு

  • August 2, 2026
  • 0 Comments

திருகோணமலை- ஸ்ரீபுர பொலிஸ் நிலையத்தின் புதிய நிர்வாகக் கட்டிடம் திருகோணமலை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் டி.எம்.யூ.மஹிந்த திஸாநாயக்கவினால் நேற்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. யுத்த காலத்தின் போது மக்களின் பாதுகாப்பிற்காக ஸ்ரீபுர கூட்டுறவு கட்டிடத்தில் தற்காலிகமாக இயங்கி வந்த குறித்த பொலிஸ் நிலையம் ஏழரை இலட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. 30 இலட்சம் ரூபாய் செலவாகும் என திட்டமிடப்பட்ட நிலையில் 10 மாதத்திற்குள் ஸ்ரீபுர பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றி […]

இலங்கை

இலங்கையில் உச்சபட்ச வெப்பநிலை திருகோணமலையில் பதிவு

  • July 25, 2026
  • 0 Comments

நாட்டில் இன்று உச்சபட்சமாக 39.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை திருகோணமலை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. இரண்டாவது அதிகபட்ச வெப்பநிலை பொலன்னறுவை மாவட்டத்தில் 38.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. அதேபோல் வவுனியாவில்  – 37.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும்,  மொனராகலையில் 37.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், முல்லைத்தீவில்   37.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.  

இலங்கை

திருமலையில் படகு பயணத் திட்டம்

  • June 16, 2026
  • 0 Comments

திருகோணமலை மாவட்டத்தில் மொரவெவ மற்றும் பன்குளம் குளத்தில் யானைகளையும் பறவைகளையும் காணும் ஒரு நடவடிக்கையாக, படகுப் பயணத் திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. மொரவெவ மற்றும் கோமரங்கடவல பகுதிகளில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்று கருத்து வெளியிட்டுள்ள திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷன் அக்மீமன,  கடந்த வருடத்திலிருந்து இத்திட்டத்தினை தொடங்குவதற்கு நாங்கள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தோம் என்றார். மேலும்  உரையாற்றிய அவர்,  “திருகோணமலை கடலோரப் […]

இலங்கை

திருகோணமலையில் காணி உரிமைக்கான மாவட்ட செயலணி ஆரம்பம்!

  • May 24, 2026
  • 0 Comments

திருகோணமலை மாவட்டத்தில் பல்வேறு காரணிகளால் காணிகளை இழந்த மக்கள் ஒன்றிணைந்து “காணி உரிமைக்கான திருகோணமலை மாவட்ட செயலணி – TiDALR” எனும் புதிய அமைப்பை ஆரம்பித்துள்ளனர். இச்செயலணியின் தலைவராக திரு. ஏ.ஏ. சிபுனிஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், செயலாளராக திருமதி. எஸ். ஸஹீலா மற்றும் உபதலைவராக திரு. நா. சண்முகம் ஆகியோரும் தெரிவாகியுள்ளனர். Human Elevation Organization நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான K. Nihal Ahamed அவர்களின் தலைமையில், திருகோணமலை சர்வோதய கூட்டமண்டபத்தில் மே மாதம் […]

இலங்கை

திருகோணமலையில் யானை தாக்குதலுக்கு இலக்கான நபர் உயிரிழப்பு!

  • May 24, 2026
  • 0 Comments

திருகோணமலை-கோமரங்காடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பக்மீகம பகுதியைச் சேர்ந்த நபரொருவர் யானையின் தாக்குதலினால் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 65 வயதுடைய ஹேரத் ஹமிகே விஜேரத்ன என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஒட்டிச்சங்குளத்தில் தேன் எடுப்பதற்காக சென்றபோது யானை தாக்கியதாக தெரிய வந்துள்ளது. இன்று (24) சுமார் 3.55 மணியளவில் கோமரங்கடவல மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அவரது சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கோமரங்கடவல […]

இலங்கை

All Ceylon Emergency Vehicle Service திருகோணமலை மாவட்ட இணைப்பாளர்கள் சந்திப்பு!!

  • April 26, 2026
  • 0 Comments

All Ceylon Emergency Vehicle Service  இன் மாவட்ட  இணைப்பாளர்களுக்கிடையிலான முக்கிய சந்திப்பு இன்று (25) Nilaveli Royal Paradise விருந்தகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பின் போது இதுவரை செய்யப்பட்ட சேவைகள் மற்றும் அதன் மூலம் மக்களுக்கு கிடைத்த நன்மைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் சேவையை மேலும் விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் பற்றியும் ஆராயப்பட்டது. திருகோணமலை வைத்தியசாலையில் மரணம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் ஜனாஸாவை குளிப்பாட்டல் மற்றும் கபன் இடல் செய்வதற்கான மைய்யத் (Mayyath) வசதிகளை ஏற்பாடு செய்வது குறித்தும் பேசப்பட்டது. […]